Tuesday, October 07, 2008

செயலிழக்கும் செயற்கைக்கோள்கள் - குணமாக்கும் ரோபோக்கள்

நம்முடைய பூமிப்பந்தைச் சுற்றி தற்பொழுது எத்தனை செயற்கைக்கோள்கள் சுற்றிக் கொண்டிருக்கும் என்று உங்களால் கணிக்க முடிகிறதா? இதன் எண்ணிக்கை 8000ஐத் தாண்டும் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள். இதில் செயலிழந்த செயற்கைக் கோள்களும் அடங்கும். செயலிழக்கும் செயற்கைக்கோள்கள் விண்வெளியிலேயே விடப்படும். இதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? கீழே உள்ள புகைப்படத்தைப் பார்க்கவும்.


இந்த செயற்கைக்கோள்கள் வெவ்வேறு தேவைகளுக்காக பல நாடுகள் விண்ணில் நிறுத்தியவை. அதனால் இதன் கட்டமைப்புகள் முற்றிலும் மாறுபட்டு இருக்கலாம். இப்பொழுது, கனடாவிலுள்ள Queen's university ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அதாவது, செயலிழந்த செயற்கைக்கோள்களை Autonomous Space Servicing Vehicle (ASSV) என்று கூறப்படும் ரோபோ தேடிக்கண்டுபிடித்து, அதைப் பிடித்து இழுத்து வந்து, இதற்காகவே விண்ணில் உருவாக்கப்படும் ஒரு பழுது பார்க்கும் நிலையத்தில் கொண்டு நிறுத்தும். அதன் பின்னர், பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் பழுது பார்க்கப் படுமாம்.

தற்பொழுது அவர்கள் செயலிழந்த செயற்கைக்கோள்களை கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். கேட்பதற்கு இந்த ஆராய்ச்சி நன்றாக இருந்தாலும், இதில் பல சிக்கல்கள் உள்ளது. சரியாக ஒரு செயற்கைக்கோளை பிடித்து இழுத்து வருவது, செயற்கைக் கோள்களின் கட்டமைப்பின் படி அதை சரி செய்வது, இதெல்லாம் சாத்தியமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு: http://rcvlab.ece.queensu.ca/~greensm/papers/TaatiIROS05.pdf

Saturday, October 04, 2008

மதுரை "கோ கார்ட்" பிரியர்களுக்கு ஒரு நல்ல சேதி

ஆமாண்ணே!!!

சென்னையில அடிக்கடி "Go Cart" ஓட்டி பழக்கமாயிடுச்சி. விடுமுறைக்காக இப்போ 5 நாள் மதுரையில இருக்கும் போது, என்னோட நண்பர் மதுரையிலயும் "கோ கார்ட்" இருப்பதாக சொன்னார். என்னடா இது? புதுசா இருக்கேன்னு கிளம்பி போனேன். சும்மா சொல்லக்கூடாது. நல்லாத்தான்யா இருக்கு. ட்ராக் நல்லா வளைஞ்சி வளைஞ்சி போறதுனால நல்லாவே இருக்கு. எங்க இருக்குன்னு கேக்குறீகளா. ரிங் ரோட்ல இருந்து சிவகங்கை சாலையில திரும்புனவுடனே வலது கை பக்கமா இருக்குங்க. அஞ்சு நிமிடத்துக்கு ரூ.75/- வசூலிக்கிறாங்க. ஊருக்கு வந்தீயன்னா முயற்சி பண்ணி பாருங்க.


அப்படியே, மதுர காரவுக யாராவது இத படிச்சீகன்னா, மதுரையில "Bowling alley" எங்கயாவது இருந்ததுன்னா தெரியப்படுத்துங்க.

Friday, October 03, 2008

நோகியா 5800 - ஐ - ஃபோன் கில்லர்

ஆப்பிள் நிறுவனம் ஐஃபோனை வெளியிட்டதுல இருந்து, ஆளாளுக்கு போட்டி போட்டுகிட்டு "ஐஃபோன் கில்லர்"னு புதுசு புதுசா கிளப்பிவிட்றானுக. போன வாரம் தான் கூகிள் நிறுவனமும், டி-மொபைலும் சேர்ந்து ஒரு ஃபோன வெளியிட்டாங்க. இப்போ புதுசா நோகியாவும் கிளம்பிடுச்சு. அனேகமா, நோகியாவோட முதல் டச் ஸ்கிரீன் மொபைலுன்னு நினைக்கிறேன். இதோ, கீழே இந்த புதூ மொபைலோட படங்கள பாருங்க. இந்த வருட கடைசில இந்த மொபைல் இந்தியாவுக்கு வந்திடும்னு எதிர்பார்க்கலாம்.

இதோட மற்ற விபரங்கள்:
  • 3.2" தொடு-திரை.
  • இதன் எடை சற்று கம்மியே, 109 கிராம்.
  • மூன்று நிறங்களில் வருகிறது, கருப்பு, சிகப்பு, நீலம்.
  • 8gb microSD கார்டுடன் வருகிறது. (max: 16gb)
  • 3.2 மெகா பிக்ஸல் காமிரா. (30 fps வரை படங்களை பதிவு செய்யலாம்)
  • Wi-Fi, Bluetooth, GPS.
  • Standard 3.5 mm ஹெட்-ஃபோன் ஜாக்.
  • 3G சப்போர்ட்.
  • விலை $340.
ஆனால், இதில் ஒரு பெரிய குறையாக காணப்படுவது, வெளி அப்ளிகேஷன்களை நிறுவ முடியாதாம்.


காதலில் விழுந்தேன் - "உனக்கென நான்" ஒரு டப்பிங் பாடல்

"காதலில் விழுந்தேன்" பாடல்கள் நன்றாகவே ஹிட் ஆகிவிட்டது. இதில் இடம் பெற்றுள்ள "உனக்கென நான்" பாடல் அப்படியே "ரிஹானா"வின் "Unfaithful" பாடலில் இருந்து காப்பி அடிக்கப் பட்டுள்ளது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், டப்பிங் செய்யப் பட்டுள்ளது. நீங்களே கேட்டுப் பாருங்கள்.

Thursday, October 02, 2008

பார்க்க வேண்டிய படங்கள்

நான் அவ்வளவாக ஆங்கில படங்கள் பார்ப்பது கிடையாது. என்னுடைய நண்பன், தான் பார்த்து இரசித்த படங்களை USB ஹார்ட் டிஸ்கில் 60gbக்கு வைத்திருந்தான். அவனிடம் இருந்து வாங்கி வந்து time-table போட்டு படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அதில் நான் மிகவும் இரசித்த படங்களின் பெயர்களை கீழே கொடுத்துள்ளேன். நீங்களும் பார்த்து இரசியுங்கள். டாரண்ட் வெப்சைட்டுகளில் தேடுனீர்களென்றால் இந்த படங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

அனைத்தும் ஆங்கில படங்கள் என்பதால், ஆங்கிலத்திலேயே எழுதுகின்றேன்.
  • In silence of lambs (Thriller)
  • Shooter (Action)
  • Toy Story (Animation)
  • Toy Story 2 (Animation)
  • Enemy at the gates (Action)
  • In pursuit of Happiness (Classical)
  • American Beauty
  • How to loose a guy in 10 days (Comedy)
  • V for Vendetta (Action)
  • Forest Gump

Wednesday, October 01, 2008

ஃபேஸ் புக் அப்ளிகேஷன்கள்

ஃபேஸ் புக் ஒரு வகையான "Social Networking site". இதன் இந்திய பயனாளர்கள், ஆர்குட்டை விட சற்று கம்மியாக இருந்தாலும், இதன் சிறப்பம்சமே இதன் அப்ளிகேஷன்கள் தான். இதிலுள்ள சில அப்ளிகேஷன்கள் ஒருவிதமான மயக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. இந்த பதிப்பில் நான் ஃபேஸ்புக்கில் பயன்படுத்தும் சில அப்ளிகேஷனைப் பற்றி எழுதுகின்றேன்.

1. KnightHood

இதுவே நான் பயன்படுத்திய முதல் அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷனை ஃபேஸ்புக்கில் நீங்கள் நிறுவிய பிறகு, நீங்கள் ஒரு போர் வீரன். ஆமாம்!!! உங்களுக்கென்று ஒரு ஊர் ஒதுக்கப் படும். தொடங்கும் பொழுது, உங்களுக்காக மூன்று கட்டடங்கள் இருக்கும், Court, Castle, Market. முத்லில், இந்த மூன்று கட்டடங்களில் உங்களது ஃபேஸ்புக் நண்பர்களை assign செய்ய வேண்டும். பிறகு, Castle மூலம் பல கட்டடங்களை கட்ட வேண்டும் (Watchtowers, Wall, Palisade, Hospital, Church, Tower, Outpost, etc).

Watchtower, Wall, Palisade - இந்த மூன்றும் உங்களது இராஜாங்கத்தின் 'defense' கட்டடங்கள். எதிரிகள் உங்களை தாக்கும் பொழுது, இந்த மூன்று கட்டடங்களையே தாக்குவார்கள். இதிலும் நீங்கள் உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு நண்பர்களுக்கும் அவர்களது பலத்தை பொறுத்தே எதிரிகளை தாக்குவார்கள். உங்களது பலம் எதிரிகளின் பலத்தை விட அதிகமாக இருந்தால், நீங்கள் வெல்வீர்கள். அல்லது அவர்கள் உங்களது இராஜ்யத்தில் நுழைந்து உங்கள் நண்பர்களையோ அல்லது தங்கங்களையோ பறித்து விடுவார்கள்.

இதைப் போல நீங்களும் பிறர் இராஜ்யத்தைத் தாக்கி தங்கங்களையும், வேலையாட்களையும் பறித்து வரலாம். விளையாண்டு பாருங்க, நல்லா டைம் பாஸ் ஆகும்.

2. Mouse Hunt

இது ஒரு சிறு பிள்ளைத்தனமான விளையாட்டு. என்னவென்றால், நீங்கள் எலி பிடிக்க வேண்டும் (உண்மையாக அல்ல, விளையாட்டில்!!!). முதலில், ஒரு நல்ல எலிப்பொறி வாங்க வேண்டும். பிறகு எலிக்கு மிகவும் பிடித்த Cheese வாங்க வேண்டும். வாங்கிய cheeseஐ பொறியில் நிறப்பி விட்டு காத்திருக்க வேண்டும். அவ்வளவு தான். எலி தானாக மாட்டும். ஒவ்வொரு எலி மாட்டும் பொழுதும், உங்களது Points மற்றும் Gold அதிகமாகிக் கொண்டே வரும். இதைப் பொறுத்து நீங்கள் வேறு அதிக பலம் கொண்ட பொறி வாங்க வேண்டும். இந்த விளையாட்டில் பலவிதமான எலிக்கள் உண்டு (Gold mouse, Steel mouse, Diamond mouse, Zombie mouse, Ninja mouse, etc). சில எலிகள் சற்று உஷாரான எலிக்கள். உங்களது பொறியில் மாட்டாமல், cheese மற்றும் goldஐ சுட்டுட்டு போயிடும்.

3. Speed Racer

இது ஒரு கார் பந்தயப் போட்டி. உங்கள் நண்பர்களையும் இந்த அப்ளிகேஷனை நிறுவச் சொல்லுங்கள். ஒரு காரை வாங்குங்கள். இதை வைத்து உங்கள் நண்பர்களுடன் போட்டி போடுங்கள். சில நேரம் அவர்கள் வெல்வார்கள், சில நேரம் நீங்கள் வெல்வீர்கள். நீங்கள் வென்றால், உங்களுக்கு points கூடும். அதை வைத்து வேறு ஒரு புதிய வேகமான காரை (more mph) வாங்க வேண்டும். அவ்வளவு தான். உங்களது காரின் பவர் அதிகமாக இருந்தால், நீங்கள் வெல்வதற்கு வாய்ப்பு அதிகமாகும்.

4. Motorcycle Madness

இதுவும் Speed Racer போலத்தான். ஒரே வித்தியாசம், இதில் காருக்கு பதிலாக மோட்டார் சைக்கிள்.

இதைத் தவிர தங்களுக்கு ஏதாவது ஒரு நல்ல ஃபேஸ்புக் அப்ளிகேஷன் இருந்தா என்ட சொல்லுங்க!!!

P1i ஹாக்ஸ் - 1

சென்ற பதிவில் P1i செல்பேசி வாங்கியதாக எழுதியிருந்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த செல்பேசி என்னிடம் நல்ல பெயரே வாங்கியுள்ளது. Symbian இயக்கி microkernel என்பதால், இதன் வேகம் சற்று குறைவாகவே இருக்கும் என்று எண்ணினேன். இதில் இருக்கும் ஒவ்வொரு சேவையும் ஒவ்வொரு அப்ளிகேஷனாகவே அமைக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் ஒரு SMS அனுப்பவேண்டும் என்றால், ஒரு அப்ளிகேஷன் இயங்க வேண்டும். நீங்கள் SMS அனுப்பியவுடன் அந்த அப்ளிகேஷன் மெமரியிலேயே இருக்கும். இவ்வாறு நீங்கள் இயக்கிய ஒவ்வொரு அப்ளிகேஷனும் மெமரியிலேயே இருக்கும். காரணம், "Symbian supports multi-tasking". பல அப்ளிகேஷன் இயங்கும் பொழுதும் இதன் வேகம் குறைவதாக தெரியவே இல்லை. இதற்கு சான்றாக இந்த வீடியோவை பார்க்கவும்.



எனினும், "Contacts" மற்றும் "Messaging" அப்ளிகேஷனின் வேகம் சற்று குறைவாகவே உள்ளதாக எண்ணினேன். இணையத்தில் தேடிப் பார்த்ததில், இதற்கு ஏற்கனவே தீர்வு இருப்பதை அறிந்தேன், http://www.uiqblog.com/2008/05/09/speed-boost-for-your-uiq3-phone/ இந்த ஹாக்கை என்னுடைய புதிய செல்பேசியில் நிறுவுவதற்கு சற்று தயக்கமாகவே இருந்தது. இருந்தாலும் துனிந்து இதை நிறுவினேன். அவர்கள் கூறியது போலவே, இப்பொழுது என்னுடைய "Contacts" மற்றும் "Messaging" அப்ளிகேஷனின் வேகம் மிகையாகவே உள்ளது.

Saturday, September 27, 2008

சோனி எரிக்ஸன் பி1ஐ - எச்டிசி டச்

நெடு நாட்க்களாக புதிய அலைபேசி வாங்க வேண்டும் என்று Nokia மற்றும் Sony Ericsson மாடல்களை ஆராய்ந்து கொண்டிருந்தேன். எனது தேவைகளை முதலில் பட்டியலிட்டேன். பயனம் செய்யும் பொழுது படம் பார்ப்பது (சற்று பெரிய திரையாக இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்) , பாடல் கேட்பது, Wi-Fi இணையத்தில் உலாவுவது, pdf புத்தகம் படிப்பது, 3G support உள்ளது. கூடுதலாக Symbianஇல் இயங்கும் ஒரு அலைபேசி தேவைப்பட்டது (program செய்து பார்ப்பதற்கு).

ஆராய்ந்து பார்த்ததில் Sony Ericsson P1i மற்றும் HTC Touch ஆகிய அலைபேசிகளை தேர்வு செய்து வைத்திருந்தேன். P1i எனது தேவைகளை எளிதாக பூர்த்தி செய்தது. ஆனால் விலை அதிகமாகத் தெரிந்தது. அதன் விலை ரு. 17,300/-

HTC Touch


Sony Ericsson P1i

HTC Touch, எனது தேவைகளில் பாதியைப் பூர்த்தி செய்தது. இதில் 3G support இல்லை. Symbian இயக்கி இல்லை, Windows Mobile தான். ஆனால், இதன் திரை சற்று பெரியதாகவே உள்ளது, 2.8". P1iயின் திரை 2.6" (HTC Touchன் திரையை விட சிறியதாக இருந்தாலும், போதுமானதாக உணர்ந்தேன்.) இதன் விலை ரூ. 13,500/-

முடிவாக Sony Ericsson P1iஐ வாங்கிவிட்டேன். இரண்டு வாரங்களாக உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். நன்றாகவே உள்ளது.

இந்த இரண்டு அலைபேசிகளின் மதிப்பீட்டுகளை கீழே கொடுத்துள்ளேன்.

Sony Ericsson P1i:
  • 2.6" திரை. படம் பார்ப்பத்ற்கு போதுமானதாக உள்ளது.
  • தொடு திரை. இதன் செயல் திறன் நன்றாகவே உள்ளது.
  • 256K வண்ணங்கள் தான் பார்க்கமுடியும். அதனால், படம் அவ்வளவு தெளிவாக இருக்காது.
  • QWERTY keyboard. ஒரு கீயில் இரண்டு எழுத்துக்கள். இடப்பக்கமாக அழுத்தினால் 'A', வலப்பக்கமாக அழுத்தினால் 'S'. இதன் பயன்பாடு நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன்.
  • இத்துடன் 1GB M2 memory card உள்ளது.
  • Symbian v9.1, UIQ3.0 platform. ப்ரோக்ராம் செய்வோர் சி++ மற்றும் ஜாவாவில் உங்கள் சொந்த அப்ளிகேஷனை வடிவமைக்கலாம்.
  • MPEG4 support - only 15fps, 320x240 resolution supported.
கூடுதல் தகவல்களுக்கு http://www.gsmarena.com/sony_ericsson_p1-1982.php

HTC Touch:
  • சற்று பெரிய திரை, 2.8"
  • TouchFlo technology உள்ளதால் இதன் UI அற்புதமாக உள்ளது.
  • பேட்டரி பேக்கப் ஒரு நாள் தான் வருவதாக தகவல்.
  • Windows programmers, C#ல் ப்ரோக்ராம் செய்யலாம்.
  • கீபேட் எதுவும் கிடையாது. தொடுதிரையில் கீகள் தோன்றும்.

Wednesday, May 28, 2008

விண்டோஸை லினக்ஸ் (உபுண்டு) போல் உருமாற்ற

உங்கள் கணினியில் உள்ள விண்டோஸ் பதிப்பைப் பார்ப்பதற்கு லினக்ஸ் (உபுண்டு) போல் உருமாற்ற, கீழ்க்கண்ட தொடுப்பில் இருக்கும் பதிப்பை காணவும்.

http://www.ubuntugeek.com/how-to-make-windows-look-like-ubuntu.html

Tuesday, May 20, 2008

ரோபோடிக்ஸ் பிரியர்களுக்கு...

சிறு வயதிலிருந்து பலருக்கு ரோபோக்கள் மேல் ஆர்வம் அதிகம் இருந்திருக்கும். ஆங்கில சினிமாக்களில் பார்த்து குதூகலித்திருந்தோம். வெளி நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ரோபோக்கள் செய்து மகிழும் நபர்கள் மிகவும் குறைவு தான். எனினும், சமீப காலமாக இந்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒரு ரோபோவை உருவாக்க mechanical மற்றும் electronics துறையில் அனுபவம் இருக்க வேண்டும். தவிர creative mind வேண்டும். சிறு குழந்தைகள் ரோபோ வடிவமைத்து ப்ரோக்ராம் பன்னும் அளவிற்கு ஒரு Robotics kitஐ, Lego நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதை மேலை நாடுகளில் 10 வய்து சிறுவர் சிறுமியர் வாங்கி வித விதமாக ரோபோக்களை உருவாக்கி வெளுத்து கட்டுகிறார்கள்.

எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. சென்ற முறை அமெரிக்கா சென்ற பொழுது வாங்கி வந்தேன். வார விடுமுறைகள் இப்பொழுது திருப்திகரமாக கரைகிறது.

நீங்களும் இதை வாங்க எண்ணினால் எனது ஆங்கில பதிவான இங்கு http://lexos.blogspot.com/2008/02/my-lego-mindstorms-nxt-kit.html செல்லவும். கூடுதல் விவரங்கள் கிடைக்கும்.

நான் உருவாக்கிய சில ரோபோக்களை கீழே கொடுக்கப் பட்டுள்ள யூ-டியூப் வீடியோக்களை பாருங்கள்.




Wednesday, May 14, 2008

Monday, May 12, 2008

கொடைக்கானல் - 1

கொடைக்கானலில் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன் அங்கு சென்றிருந்தேன். இதோ, அங்கே சிறைபிடித்த சில படங்கள்.












Friday, March 21, 2008

ரோபோ தீம் ம்யூசிக்காம்.... அய்யோ அய்யோ

ரஜினி, புது படத்துல நடிக்கிறதா ஒரு அறிவிப்பு வந்துட்டா போதும். ஆளாளுக்கு புது புது கத, பேரு, பன்ச் டயலாக்குலாம் எழுத ஆறம்மிச்சிடறாங்க. இப்போ ரோபோ படம் வேற பயங்கர எதிர்பார்ப்ப கிளப்பீருக்கு. சொல்லவா வேணும். ஆளாளுக்கு சொந்தமா புகைப்படம் வடிவமச்சி இணையத்துல உலாவ விட்டுட்டு, இது உண்மையாவே ரோபோ படத்துல வர ரஜினி கெட்-டப்புன்னு சொல்றாங்க.

இங்க ஒருத்தரு என்ன பண்ணீருக்காருன்னு நீங்களே கேட்டுப் பாருங்க. ரோபோ தீம் ம்யூசிக்காம். கேட்டா புதுசாத்தான் இருந்துச்சு. என்னடான்னு பாத்தா, பாய்ஸ் படத்துல வர்ற "மாரோ மாரோ" பாட்ட கொஞ்சம் மெதுவா ஓட்டி ரெகார்ட் பண்ணீருக்காங்க.

இதுல ஓவரா பில்டப்பு வேற:
The theme music from Robo has been leaked. This is a shock for the Robo team as this is the second time this is happening to the Rajini - Shankar - Rahman duo.

Rahman has used weird electronic beats for this cult track whic is sure to make a buzz on its proper release which is due at least a year away!

இன்னும் இந்த படத்துல கம்போசிங் வேலையே ரஹ்மான் ஆரம்பிக்கல. அதுக்குள்ள......

அய்யோ அய்யோ...

http://www.youtube.com/watch?v=oIu3Bpn33VM

Thursday, March 20, 2008

ஸ்லிங் பாக்ஸ்

இணையம் உருவானதில் இருந்து உலகம் சுறுங்கி விட்டது. வீட்டில் இருந்த படியே எல்லாம் செய்துவிடலாம். அதே மாதிரி, வெளியூருக்கு போன பிறகு, உங்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியில் வரும் நிகழ்ச்சிகளை பார்க்க விரும்பினால்? அதற்கு விடை அளிக்கிறது "Sling Box". இந்த கருவியை உருவாக்குவது "Sling Media" என்றொரு நிறுவனம்.

"Sling box" என்பது ஒரு கணினி "bridge" அளவிற்கு இருக்கும். உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள Video/Audio out ஐ எடுத்து இந்த பெட்டியில் சொருக வேண்டும். பிறகு, இதில் உள்ள ethernet interface மூலம் இணையத்தில் இணைத்து விடுங்கள். இப்பொழுது உங்கள் வீட்டு தொலக்காட்சி நிகழ்ச்சிகளை எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம்.

இணையத்தில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு "Sling Player" என்ற மென்பொருள் தேவை. இதை உங்கள் கணினியிலோ, அல்லது "Pocket PC"யிலோ நிறுவ வேண்டும். ஒவ்வொரு ஸ்லிங் பாக்ஸிற்கும் ஒரு "Finder ID" உண்டு. இந்த எண்னை இந்த மென்பொருளில் செலுத்தினால், உங்கள் ஸ்லிங் பாக்ஸுடன் தொடர்பு ஏற்படுத்தி, உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கணினியிலோ, கையடக்க கணினியிலோ காண்பிக்கும்.

இடையில், வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று நினைத்தால்? அதற்கும் இதில் விடை இருக்கிறது. ஸ்லிங் பாக்ஸுடன் ஒரு IR sensor உம் வருகிறது. இதை இந்த பெட்டியுடன் இணைத்து மறுமுனையை உங்கள் தொலைக்காட்சி முன் வைத்து விட வேண்டும். ஸ்லிங் ப்ளேயர் மென்பொருளில் உள்ள remoteஐ பயன் படுத்தி நிகழ்ச்சிகளை மாற்றி பார்க்கலாம்.

இது இந்தியாவில் பயன் படுத்துவதற்கு அதிவேக இணையம் தேவை. இது அமேரிக்கச் சந்தைகளில் $100க்கு கிடைக்கும்.

மேலும் தகவல்கள் அறிய, http://electronics.howstuffworks.com/slingbox.htm/printable

Wednesday, March 19, 2008

கூகிள் ஸ்கெட்ச் - அப்

கட்டிடத் துறையில் வேலை செய்வோர் கட்டிடங்களை கணினியில் வடிவமைக்க அதிக அளவில் பயன்படுத்துவது, CAD மென்பொருள். எனினும், இந்த மென்பொருளைக் கொண்டு மிகவும் தேர்ந்தவர்கள் மட்டுமே சிறந்த முறையில் கட்டிடங்களை வடிவமைக்க முடியும். ஆனால், கூகிள் ஸ்கெட்ச் - அப் அப்படியில்லை. சாதாரன கட்டிடக் கலையைப் பற்றி எதுவுமே அறியாதவர்கள் கூட இதில் modelகளை உருவாக்கலாம். ஒரு நாள் சும்மா இந்த மென்பொருளை உபயோகித்து பார்க்கலாம் என்று கீழே உள்ள இரு வீடுகளைக் கட்டினேன். :)


இந்த மென்பொருளில் முக்கியமாக உள்ளது "push/pull" டூள். இதை வைத்து சும்மா புகுந்து விளையாடலாம். இம்மென்பொருளை இலவசமாக இங்கு http://sketchup.google.com/ பதிவிறக்கம் செஞ்சிக்கோங்க.

பிறகென்ன, இனி நினச்ச நேரத்துக்கு விதவிதமா வீடு கட்டுங்க. இன்னொரு விசயம். உங்களோட வீட இதுல வடிவமைச்சு கூகிள் எர்த்துல export செஞ்சிடலாம்.

கலக்குங்க!!!

Tuesday, March 18, 2008

உலக வர்த்தக மையம் - தற்பொழுது

உலக வர்த்தக மையம் தீவிரவாதிகளால் இடிக்கப் பெற்று ஆறரை வருடங்களாகின்றன. தற்பொழுது, இந்த இடத்தைச் சுற்றி வேலி அமைத்து வேலை செய்து வருகின்றனர். உலக வர்த்தக மையம் இருந்த இடத்தில் மீண்டும் 5 கட்டிடங்களை எழுப்ப உள்ளனர். இதில் உயர்ந்த கட்டிடமாக "ஃப்ரீடம் டவர்" விளங்கும். இதன் உயரம், 1776 அடியாம்.

இந்த இடத்திற்குச் செல்லும் பொழுது, ஏதோ ஒரு மெளனம் நம்மை சூழ்ந்து கொள்கிறது.

இங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், உங்கள் பார்வைக்கு....




Saturday, March 08, 2008

இராச இராச சோழன்

பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு, இராச இராச சோழனின் பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தாஜ் மஹாலுக்கு இணங்க இவர் கட்டிய தஞ்சாவூர் கோயில் விளங்குகிறது. எனினும் இராச இராச சோழன் இந்திய அளவில் பேசப்படுவதில்லை.

சமீபத்தில் இவரைப் பற்றி ஒரு குறும்படம் பார்த்தேன். இதில் இராச இராச சோழன் அற்புதமாக காட்டப் பெற்றுள்ளார். கோயில் கோபுரம் கட்டுவதற்கு கற்களை எப்படி பிளந்தனர் என்று ஆய்ந்துள்ளனர். இதை இதில் கானலாம். யானைகளை கட்டுமான வேலைகளுக்கு பயன்படுத்திய விதத்தையும் கூறுயுள்ளனர். நீங்களும் பார்த்து மகிழுங்கள். இதையெல்லாம் நாம் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும். ஆனால், வெளி நாட்டவர் இதை செய்கின்றனர்.

http://video.google.com/videoplay?docid=-5096103596865842301&q=south+king&pr=goog-sl

Saturday, March 01, 2008

ப்ளூ-ரே வென்றது

டோஷிபாவும் சோனியும் சென்ற வாரம் வரை மல்லுக்கட்டிக் கொண்டுருந்தனர். காரணம், இருவரும் வெவ்வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தித் தயாரிக்கும் DVDக்கு அடுத்தபடியான குறுந்தட்டைத் தான். டோஷிபா, தனது HD DVD (High-Definition DVD)ஐ சந்தையில் அறிமுகப்படுத்தியது. இது சாதாரனமாக நாம் பயன்படுத்தும் DVDஐ விட 3.5 மடங்கு தகவலைத் தேக்க முடியும். இக்குறுந்தட்டை அடிப்படையாகக் கொண்டு HD DVD playersயும் வர ஆரம்பித்தது. மக்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள். HD DVDயில் வெளி வரும் படங்களும் விலை மிகுதியாக இருந்தது.

இதற்கிடையில், சோனி நிறுவனத்தின் Blu-Ray Disc, HD DVDஐ விட அதிக தகவலைத் தேக்க முடியும் என்று நிரூபித்தது. விளைவு, டோஷிபா தோற்றது. சென்ற வாரம், இனி HD DVD உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. இதனால், HD DVD playersஐ வாங்கியவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

சோனியின் Blu-Ray தொழில்நுட்ப்பத்தைப் பயன் படுத்தி 50GB வரை தகவலைத் தேக்கமுடியும். எப்படியென்றால், தகவலைத் தேக்க ப்ளூ லேசர் பயன்படுத்தப் படுகிறது. இதன் wavelength சிகப்பு நிற லேசரை விட குறுகியது. ஆதலால், data density அதிகமாகக் கிடைக்கும்.

ஆனால், இந்த ப்ளூ லேசரிற்கு அதிக மின்சாரம் தேவையாம். முன்பு, லேப்டாப்பில் ப்ளூ-ரே ட்ரைவை பொறுத்தி உங்களால் ஒரு முழூ படத்தைக் கூடப் பார்க்க முடியாது. தற்பொழுது, இதை சரி செய்யும் விதத்தில் அதன் சர்க்யூட்டில் மாற்றம் செய்து, படத்தை டீ-கோட் செய்ய nVidia மற்றும் ATI கார்டுகளை பயன் படுத்துகின்றனர்.

இந்தியாவில் இன்னும் இத்தொழில்நுட்பம் எவ்வளவு பிரபலமாகியுள்ளது என்று தெரியவில்லை.சற்று நாட்கள் பொறுத்து கணினி வாங்கினீர்களென்றால், ப்ளூ-ரே பொறுத்தப் பட்ட கணினியை வாங்கவும்!!!

ப்ளூ-ரே டிஸ்க்

யாரடி நீ மோகினி - பாடல்கள்

யாரடி நீ மோகினி!!!

தனுஷ் மற்றும் நயன்தாரா நடிக்கும் இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவர் எ.ஜவகர். தெலுங்கிலிருந்து re-make செய்யப்பட்டு தமிழில் வெளியாகிறது. தெலுங்கில் எழுதி இயக்கியவர் செல்வராகவன். இசை அமைத்திருப்பவர் செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இத்திரைப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. மூன்று பாடல்கள் மிக அருமையாக அமைந்துள்ளது. மெலடி பாட்டுக்கள்.

1. ஒரு நாளைக்குள் எத்தனை கனவு - கார்த்திக், ரீதா
3. வெண்மேகம் - ஹரிஹரன்
4. எங்கேயோ பார்த்த மயக்கம் - உதித் நாரயணன்.

மேலே கூறிய மூன்று பாடல்களும் எனது லேப்டாப்பிலும், MP3 playerஇலும் தற்பொழுது முதல் இடத்தில் உள்ளது. நீங்களும் கேட்டுப்பாருங்கள். விரும்புவீர்கள்.

இத்திரைப்படத்தின் பாடல்களை கேட்டு மகிழ...

Friday, February 29, 2008

ஐபாடில் லினக்ஸை நிறுவ

ஐபாடை உபயோகிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு, அதன் எளிமையான வடிவமைப்பே காரணம். ஐபாடை இயக்கி வரும் இயக்கி 'ஆப்பிள்' நிறுவனத்திற்குச் சொந்தமானது.

ஐபாடை ஹாக் (hack) செய்து அதில் லினக்ஸை நிறுவினால்? அதற்கு வழி கொடுக்கிறது, http://www.ipodlinux.org/ என்கிற தளம். ஓபன் சோர்ஸை அடிப்படையாகக் கொண்டு, uClinux எனும் லினக்ஸ் கெர்னலை ஐபாடிற்கு மாற்றி எழுதியுள்ளனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை 'ஐபாட் நானோ'வைத் தவிர இங்கு கிடைக்கும் லினக்ஸை, மற்ற எல்லா வகை ஐபாடிலும் நிறுவலாம்.

பிறகென்ன? லினக்ஸை நிறுவி, பின் உங்கள் சொந்த applicationனை re-compile செய்து ஐபாடில் நிறுவி ஜமாயுங்கள். ஆனால், லினக்ஸை நிறுவும் பொழுது ஜாக்கிரதையாக நிறுவவும். தவறாக ஏதாவது செய்தால், உங்கள் ஐபாடை பிறகு பயன்படுத்தவே முடியாமல் போய்விடும்.

Thursday, February 28, 2008

சென்னை 'ட்ரெக்' நன்பர்களுக்கு....

சென்னை, பெங்களூரில் வாழும் நன்பர்கள் வார விடுமுறைகளில் ட்ரெக் "Trek" செய்ய விரும்பினால், இங்கு http://sachennaitrekking.blogspot.com/ செல்லவும். இது எனது அலுவலகத்தில் வேலை செய்யும், அடிக்கடி 'ட்ரெக்' செல்லும் நன்பர்கள் சேர்ந்து உருவாக்கியது. மாதம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ சென்று கொண்டிருக்கிறோம். இப்பொழுது, பிற நன்பர்களையும் வரவேற்கிறோம். இதுவரை, கொடைக்கானல், வெள்ளரிமலா (வயநாடு), செஞ்சி, ஷக்லேஷ்பூர், திருமலா, தடா, மாமல்லபுரம் போன்ற பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளோம்.

நீங்களும் சேற விரும்பினால், கீழ்கண்ட இடங்களுக்குச் சென்று பதியவும்:
orkut - http://www.orkut.com/Community.aspx?cmm=49594218
google group - http://groups.google.co.in/group/sachennaitrekkingclub

மேலும், http://spreadsheets.google.com/viewform?key=pJRZExD_boRC7HFWyw88vCg இங்கு சென்று உங்கள் விவரங்களை எங்களுக்குத் தெரியப் படுத்தவும்.

Friday, February 15, 2008

என் இனிய இயந்திரா....

டிஸ்னியும் பிக்ஸாரும் இணைந்தால் போதும். அவர்கள் உருவாக்கும் படங்களில் கற்பனைக்கு பஞ்சமே கிடையாது. அடுத்து இவர்கள் இருவரும் கை கோர்த்திருப்பது, "Wall-E" எனும் ரோபோவை மைய்யமாகக் கொண்டுள்ள படத்தை உருவாக்க. இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இறுதியாக இணைந்தது "Ratatouille" எனும் படத்திற்காக. ரோபோ என்றால் இது ஒரு "Sci-Fi" படம் என்று நினைத்துவிட வேண்டாம். இது ஒரு காதல் படமாம்.

கதைச் சுருக்கம்:
குப்பைகளை சுத்தம் செய்வதே இந்த ரோபோவின் பணியாகும். இந்த உலகத்தில் குப்பைகள் அதிகமாக, மக்கள் அனைவரும் உலகை விட்டு வெளியேறுகின்றனர். கடைசியாக, இந்த இயந்திரம் மட்டும் தனது வேலையை செய்து கொண்டிருக்க, வெளி கிரகத்திலிருந்து "Eve" எனும் ரோபோ வருகிறது. "Wall-E" "Eve" மேல் காதலில் விழுகிறது. ஆனால், "Eve" "Wall-E" போல் மனித உணர்ச்சிகளை அறிந்தது கிடையாது. கடைசியில், "Eve"வை மனம்மாற்றி, இந்த உலகத்தை சுத்தம் செய்து மக்களை மறுபடியும் இந்த பூமியில் வாழ வைக்கிறது.

இந்த படத்தின் Trailer கீழே கொடுக்கப் பட்டுள்ளது:





Thursday, February 14, 2008

கோயம்புத்தூரில் "ஏலியன்ஸ்" உலா???

Stephen Spielberg, E.T. என்றொரு படம் இயற்றினார். வெளி கிரகத்தில் இருந்து "ஏலியன்ஸ்" வ‌ந்து செல்லும் பொழுது, ஒரு "ஏலியன்" மட்டும் பூமியில் மாட்டிக் கொள்ளும். நாம் அந்த படத்தை ரசித்தோம். ஆனால், நிஜத்திலும் அப்படியே இருக்குமா என்ன?

UFO என்றால் Unidentified Flying Objects என்று அர்த்தம். இதுவரை UFOக்கள், இந்தியாவில் யாரும் பார்த்ததாக தகவல்கள் இல்லை. ஆனால், கோயம்புத்தூரில் அவை தென்பட்டிருக்கிறது.

இதோ:



ஸ்டீவ் ஜாப்ஸ்

இன்று, ஐபாடை (iPod) உபயோகப் படுத்துபவர்களில் பாதி பேருக்கு "ஸ்டீவ் ஜாப்ஸ்" என்றால் யார் என்றே தெரியாது. இவர் தான் ஆப்பிள் நிறுவன‌த்தின் இன்றைய அதிபர் (CEO). இவர் ஆப்பிள் நிறுவனத்தை, 1976ல் Steve Wozniak என்பவருடன் சேர்ந்து நிறுவினார்.

இவர் உலகள‌வில் ஏகப்பட்ட மக்களை தனது அழகு மிகுந்த படைப்புகளால் (Machintosh, iPod, iPhone) கவர்ந்துள்ளார். எனினும், இவர் தான் நிறுவிய நிறுவனத்திலிருந்தே, தனது கோபத்தாலும், அடக்கியாளும் குணத்தாலும் துறத்தப்பட்டார். வெளியில் வந்த பிறகு, "நெக்ஸ்ட்" என்று ஒரு கம்பெனி ஆரம்பித்தார்.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுது, ஜாப்ஸின் "நெக்ஸ்ட்" நிறுவனத்தை ஆப்பிள் கம்பூட்டர்ஸ் வாங்கியது. ஜாப்ஸும் ஆப்பிள் நிறுவனத்தின் CEO ஆனார்.

இவரைப் பற்றி, iCon என்றொரு புத்தகம் வெளியானது. இதில், இவரைப் பற்றிய ஏடாகூடமான செய்திகள் வெளியானதால், அதை வெளிவராமல் செய்தார். ஆனாலும், அதை நம்மூரில் பழைய புத்தகக் கடை ஒன்றில் கண்டு, அதை வாங்கிப் படித்தேன். நன்றாக இருந்தது.

இவரைப் பற்றி மேலும் தகவல்கள் அறிய, Steve Jobs