Friday, February 29, 2008

ஐபாடில் லினக்ஸை நிறுவ

ஐபாடை உபயோகிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு, அதன் எளிமையான வடிவமைப்பே காரணம். ஐபாடை இயக்கி வரும் இயக்கி 'ஆப்பிள்' நிறுவனத்திற்குச் சொந்தமானது.

ஐபாடை ஹாக் (hack) செய்து அதில் லினக்ஸை நிறுவினால்? அதற்கு வழி கொடுக்கிறது, http://www.ipodlinux.org/ என்கிற தளம். ஓபன் சோர்ஸை அடிப்படையாகக் கொண்டு, uClinux எனும் லினக்ஸ் கெர்னலை ஐபாடிற்கு மாற்றி எழுதியுள்ளனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை 'ஐபாட் நானோ'வைத் தவிர இங்கு கிடைக்கும் லினக்ஸை, மற்ற எல்லா வகை ஐபாடிலும் நிறுவலாம்.

பிறகென்ன? லினக்ஸை நிறுவி, பின் உங்கள் சொந்த applicationனை re-compile செய்து ஐபாடில் நிறுவி ஜமாயுங்கள். ஆனால், லினக்ஸை நிறுவும் பொழுது ஜாக்கிரதையாக நிறுவவும். தவறாக ஏதாவது செய்தால், உங்கள் ஐபாடை பிறகு பயன்படுத்தவே முடியாமல் போய்விடும்.

2 comments:

வடுவூர் குமார் said...

மேஜை கணினிக்கு லினக்ஸை கொண்டுபோவதிலேயே பல கஷ்டங்கள், அதில் ஐபோடை வாங்கி ஹேக் செய்ய நம்ம மக்களுக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும்.

புதுப்பாலம் said...

Nokia போன்ற கைப்பேசியில் தழிழ் (UNICODE) வலைப்பக்கம், இணையப்பக்கம் போன்றவை காண என்ன, எப்படி setup செய்ய வேண்டுமென்று தாங்களோ, இந்த பகுதிக்கு விஜயம் செய்வர்களோ அறிய தரவும்.

அன்புடன்
இஸ்மாயில் கனி