கூகிள் ஸ்கெட்ச் - அப்
கட்டிடத் துறையில் வேலை செய்வோர் கட்டிடங்களை கணினியில் வடிவமைக்க அதிக அளவில் பயன்படுத்துவது, CAD மென்பொருள். எனினும், இந்த மென்பொருளைக் கொண்டு மிகவும் தேர்ந்தவர்கள் மட்டுமே சிறந்த முறையில் கட்டிடங்களை வடிவமைக்க முடியும். ஆனால், கூகிள் ஸ்கெட்ச் - அப் அப்படியில்லை. சாதாரன கட்டிடக் கலையைப் பற்றி எதுவுமே அறியாதவர்கள் கூட இதில் modelகளை உருவாக்கலாம். ஒரு நாள் சும்மா இந்த மென்பொருளை உபயோகித்து பார்க்கலாம் என்று கீழே உள்ள இரு வீடுகளைக் கட்டினேன். :) இந்த மென்பொருளில் முக்கியமாக உள்ளது "push/pull" டூள். இதை வைத்து சும்மா புகுந்து விளையாடலாம். இம்மென்பொருளை இலவசமாக இங்கு http://sketchup.google.com/ பதிவிறக்கம் செஞ்சிக்கோங்க.
பிறகென்ன, இனி நினச்ச நேரத்துக்கு விதவிதமா வீடு கட்டுங்க. இன்னொரு விசயம். உங்களோட வீட இதுல வடிவமைச்சு கூகிள் எர்த்துல export செஞ்சிடலாம்.
கலக்குங்க!!!
6 comments:
வாவ்!
அருமையாக வீடு கட்டிருக்கீங்களே!!
இதை வெளிப்புறத்துக்கு மட்டுமே உபயோகிக்க முடியும் போல் இருக்கே??
நன்றி நன்பரே!!!
இதில் சில "in-built component" உள்ளன. அதாவது, மின்விசிறி, நாற்காலி போன்றவை. இதை பயன் படுத்தி, வீட்டின் உட்புறத்தையும் வடிவமைக்கலாம்.
மிக உபயோகமான ஒரு தகவலுக்கு
நன்றி!
அருமை!
ரொம்ப அழகா செய்திருக்கீங்க..
ஆனா அதை எப்படி jpg யா சேவ் செய்தீங்க..
அனைவருக்கும் நன்றி.
jpg கோப்பாக சேமிக்க, File > Export > 2D Graphics
Post a Comment