Tuesday, August 29, 2006

இதுவல்லவோ நட்பு???

சமீபத்தில், எனது நன்பர் ஒருவரிடம் உரையாற்றிக்கொண்டிருந்த பொழுது, அவர் படித்த ஒரு ஆங்கில கதை பற்றி என்னிடம் கூறினார். அது எனது மனதை வெகுவாக பாதித்து விட்டது. படித்துப் பாருங்கள். உங்களைக் கூட அந்த கதை பாதிக்கலாம்.

இரண்டு நன்பர்கள் போர்க்களத்தில் ஒன்றாக சென்று போர் புரிகின்றனர். இருவரும், ஒருவரை விட்டு ஒருவர் போருக்குச் செல்ல மாட்டார்கள். ஏனென்றால், போர்க்களத்தில் ஒருவர் மடிந்து ஒருவர் உயிர் வாழ்வதை இருவரும் விரும்பவில்லை.

ஓர் நாள், அந்த இரண்டு நன்பர்களில் ஒருவனுக்கு, போர்க்களத்தில் காயம் பட்டது. காயம் சிறிது என்றாலும், அவனால் மருநாள் போர்க்களத்திற்கு செல்லமுடியவில்லை. தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவனை அவனது நன்பன் சந்தித்து, "நான் சென்று வருகிறேன். உன்னால் இன்று போர்க்கள‌த்திற்கு வர முடியாது. ஆதலால், நீ ஓய்வெடுத்துக் கொள். மாலை உன்னை சீக்கிரமாக வந்து சந்திப்பேன்" என்று கூறிவிட்டுச் சென்றான்.

போர்க்களத்தில், எதிர்பாராத விதமாக இவன் சென்ற குழுவை எதிரிகள் சூழ்ந்து கொண்டார்கள். என்ன செய்வதென்று தடுமாறிய போது, இவர்கள் மீது எதிரிகள் குண்டுகளை மழையாக பொழிந்தார்கள். குண்டடி பட்டு நமது நன்பன் கீழே விழுந்தான். ஆயினும், உயிர் அப்பொழுதே பிரியவில்லை.

இந்த தகவலை அறிந்த அவனது நன்பன், "நான் சென்று என் நன்பனைப் பார்க்க வேண்டும். அவன் என‌க்காக உயிரைப் பிடித்து காத்துக்கொண்டிருப்பான்." என்று கூறினான். அதற்கு அவனது மேலதிகாரிகள் மறுத்துவிட்டனர். "நீ காயம் பட்டுள்ளாய். போர்க்களம் சென்றால் நீயும் உயிர் விட வேண்டியது தான்" என்றனர்.

அவர்கள் பேச்சை பொருட்படுத்தாமல், தனது காயங்களை மதிக்காமல், அவன் போர்க்களம் சென்றான். போர்களத்தில், காயம் பட்டு சுயநினைவை இழந்திருந்த தனது நன்பனை மடியில் ஏந்திக் கொண்டு கன்னீர் விட்டு கதறி அழுதான்.

அப்பொழுது, பூ மலர்வதைப் போல் தனது கண்களைத் திறந்து அவன் நன்பன், "வந்துவிட்டாயா? நான் உனக்காகத் தான் காத்திருந்தேன். நீ... நீ வருவாய்... என்று நான் அறிவேன்." என்று கூறியதும், வாடிய பூ போல் தனது உயிரை நன்பன் மடி மீதே விட்டான்.


இதைக் கேட்டதும், அவன‌து நன்பன் அவனை இறுக கட்டிக் கொண்டு, வானத்துக்கும் பூமிக்கும் சேர்த்து அழுதான். எதிர் பாராதவிதமாக, அவன் பின்னால் இருந்து பாய்ந்து வந்த குண்டு, அவன் உயிரயும் சேர்த்து கொண்டு சென்றது.

ஏற்கெனவே, குண்டடி பட்டிருந்த இவனை அந்த குண்டு வெகு நேரம் விட்டு வைக்கவில்லை. அவன் விட்டது தனது உயிரையென்றாலும், தனது நன்பனை விட்டு விடவில்லை. அவனை இறுக கட்டிக் கொண்டே மண்ணில் விழுந்தான்.

அன்று இற‌ந்தது இரு உயிர்கள் என்றாலும், அவர்கள் போற்றி வந்த நட்பு அல்ல.

Tuesday, August 22, 2006

காஞ்சி ஏகம்பரநாதர் கோயில்

இரண்டு வாரங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் சென்று ஆலய தரிசனம் பெற்று திரும்பியிருந்தேன். அங்குள்ள சிறப்பு வாய்ந்த கோயில்களைப் பற்றி புகைப்படங்களுடன் தங்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில், பழமை வாய்ந்த ஏகம்பரநாதர் கோயிலை பற்றி இங்கு எழுதுகிறேன். இந்தக் கோயில் 3500 வருட கால வரலாற்றைக் கொண்டது. இங்குள்ள கோயில் கோபுரம் 192 அடி உயரமாக அமைந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும். இது தென்னிந்தியாவில் உள்ள மிக உயர்ந்த கோபுரமாக போற்றப்படுகிறது.

கோயில் கோபுரம்


கோபுரத்திற்கு ஈடு கொடுக்கும் கதவு.

கோயிலினுள்ளே...


வரலாறு:
இந்தக் கோயிலின் வரலாறு மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. சுமார், 3500 வருடங்களுக்கு முன்னர் சிவபெருமான் கைலாசத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது, பார்வதி தேவி சற்று விளையாட்டிற்காக பரமசிவனின் கண்களை மூடியுள்ளார். இதனால் கோபமுற்ற சிவன், பார்வதியை தண்டனை அடையச் செய்ய பூலோகத்திற்கு அனுப்பினார்.

பூமிக்கு வந்த பார்வதி, ஒரு நதிக்கரையில், மாமரத்தடியில் ஈர மன்னால் சிவலிங்கத்தை உருவாக்கி வணங்கி வந்தார். பார்வதியின் பக்தியை சோதிக்க, சிவன் பலத்த மழையையும் காற்றையும் பூமியில் வீசச் செய்தார். இதிலிருந்து லிங்கத்தை காப்பதற்கு, பார்வதி பெரிதும் போராடியுள்ளார்.

இறுதியில், பார்வதி முன்பு சிவன் தோன்றி அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளார். இப்பொழுது இருக்கும் ஏகம்பரநாதர் கோயில், அந்த இடத்திலேயே கட்டப் பெற்றுள்ளது.

இக்கோயிலுக்குள்ளே, பார்வதி எந்த மாமரத்தடியில் சிவலிங்கத்தை வணங்கி வந்தாரோ, அந்த மரம் சென்ற ஆண்டுவரை இங்கு இருந்து வந்துள்ளது. ஆனால், இப்பொழுது அந்த மரத்தின் கண்றையே பார்க்க முடிகிறது.

அந்த மரம் பல சிறப்புகளை வாய்த்து வந்துள்ளது. அந்த மரத்தில் நான்கு கிளைகள் உண்டு என்றும், ஒவ்வோர் கிளையில் உள்ள மாம்பழங்களும் ஒவ்வோர் சுவை உடையதென்றும் கூறப்படுகிறது. இதில் காய்க்கும் பழத்தை உண்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.


பார்வதி எந்த நதிக்கரையில் அமர்ந்து சிவபெருமானை வண‌ங்கி வந்தாரோ, அந்த நதி தற்பொழுது சிறு குளமாகவே காட்சியளிக்கிறது.

Monday, August 21, 2006

நீயும் என் மகனா???

சனிக் கிழமை, கும்பகோணத்திற்கு அருகிலுள்ள "சூர்யனார்" கோயிலிற்குச் சென்றிருந்தேன். கோயில் ப்ரார்த்தனையை முடித்து விட்டு வெளியில் வரும் பொழுது, ஒரு கிழவி சாலையில் நடந்து செல்கின்றவர்களிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள்.

நான் எதிர்பார்த்தது போல், என்னிடமும் பிச்சை கேட்டாள். நான் ஒன்றுமே கூறாமல், முன்னே நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது அவள், "அய்யா, என்னயா நீயும் என் பிள்ளை போல் கண்டுகொள்ளாமல் செல்கிறாயே?" என்று கேட்டாள். இதை கேட்டதும் என‌க்குத் தூக்கி வாறிப்போட்டது.

நான் என்ன செய்ய முடியும்? கையில் வைத்திருந்த இரண்டு ரூபாயை அவளிடம் கொடுத்து, உள்ளத்தில் சோகத்தை அவளிடம் வாங்கிக் கொண்டு நடந்தேன்.

Friday, August 18, 2006

ஜனாதிபதியின் எளிமை!!!

சமீபத்தில், குடியரசுத் தலைவர் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்கள் குழந்தைகளுடன் உறையாடிக்கொண்டிருந்த‌ பொழுது, ஒரு குழந்தை, "பிற்காலத்தில், மக்கள் உங்களை விஞ்ஞானி என்று கூறுவதை விரும்புவீர்களா அல்லது இந்திய குடியரசுத் தலைவர் என்று கூறுவதை விரும்புவீர்களா?" என்று கேட்டது.

அதற்கு அவர், "பிற்காலத்தில், மக்கள் என்னை நல்ல மனிதன் என்று கூறுவதையே விரும்புவேன்" என்றார்.

இது சிறிய பதில் என்றாலும் மிகுந்த கருதாழ‌த்தைக் கொண்டது. இதை மக்கள் சற்றே சிந்தித்துப் பார்த்து, தங்கள் வாழ்கையில் பின்பற்ற‌ வேண்டும்.

Thursday, August 17, 2006

காலத்தைத் தாண்டி நிற்கும் காஞ்சி...

காஞ்சிபுரம்.

பழமை வாய்ந்த தமிழ் நகரங்களில் காஞ்சிபுரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சுமார் 1000 வருடங்களைத் தாண்டிய வரலாற்றைக் கொண்டது. கி.பி. 2ம் நூற்றாண்டில் இது பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்பொழுது, இங்கு கட்டப்பெற்ற பழமை வாய்ந்த கோயில்கள் ஏறாள‌ம். இதன் சிறப்பு, இன்னும் இக்கோயில் கோபுரங்கள் வின்னை முட்டிக் கொண்டு நிற்கிறது.

பிறகு, இது சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. பொன்னியின் செல்வன் படித்திராதவர்களுக்கு ஒரு சிறு செய்தி. சுந்தர சோழர்களின் காலத்தில், அவருடைய புதல்வன் ஆதித்த கரிகாலன் தனது தந்தைக்காக ஒரு பொன் மாளிகையை எழுப்பியிருந்தார். ஆனால், இது காஞ்சியில் எங்குள்ளது என்பதை யாம் அறியோம் பராபரமே.

பின், சோழர்களின் கையிலிருந்து இது விஜய நகர அரசர்களின் கை மாறியது. காஞ்சி, இம்மூன்று அரசுக்கும் தலைநகரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கு விஷ்னு கோயில்கள் ஏறாளம் உள்ளன. சிவ ஸ்தலங்களில் புகழ் பெற்ற ஏகம்பரநாதர் கோயில் இங்கு உள்ளது. இதில், சிவபெருமானை பூமியாக வழிபடுகின்றனர்.

ஒவ்வோர் கோவில், அதன் சிறப்புகள் பற்றி வரும் பதிப்புகளில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். காஞ்சியை பல அரசுகள் ஆண்டுவந்த போதும், பல்லவர் காலத்தில் கட்டப் பெற்ற கோயில்கள் கலை நயம் மிக்கவை.

Monday, August 07, 2006

பிறப்பில் வருவது யாதென கேட்டேன்
பிறந்து பார் என இறைவன் பனித்தான்

இறப்பில் வருவது யாதென கேட்டேன்
இறந்து பார் என இறைவன் பனித்தான்

வாழ்வில் வருவது யாதென கேட்டேன்
வாழ்ந்து பார் என இறைவன் பனித்தான்

அனுபவித்தே தான் வாழ்வது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன்? என கேட்டேன்

ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்.