Tuesday, June 08, 2010

வருகிறது ஐ9000

ஐ9000 என்றவுடன் ஏதோ ஹுண்டாயின் புதிய வண்டி என்று எண்ணிவிட வேண்டாம். இது சாம்சங் (Samsung) நிறுவனம் புதிதாக வெளிவிடவிருக்கும் செல்பேசி. இது சந்தையில் இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதில் அப்படி என்ன பிரமாதம் இருக்கப் போகிறது என்று எண்ணிவிட வேண்டாம். உண்மையிலேயே இதில் கூறுவதற்கு அதிகம் இருக்கிறது. ஆண்ட்ராய்டு (Android 2.1) இயக்கியை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியிருக்கும் செல்பேசிகளில் இது முதல் இடத்தைப் பிடிக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

இதில் உள்ள புதிய சேவைகள் என்ன என்று பார்க்கலாம்:
  • 4" AMOLED capacitive touchscreen.
  • 1 GHz CPU.
  • 5 MP camera.
  • 720p video recording at 30fps.
  • Bluetooth 3.0.
  • HD xVid playback.
  • Accelerometer.
  • Swype predictive text input.
இந்த செல்பேசியைப் பற்றி மேலும் அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.



இதன் விலை தற்பொழுது நியமிக்கப் படவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

Thursday, May 13, 2010

மூளையின் அதிர்வுகள்

நாம் சிந்தனை செய்யும் பொழுதோ, கோவப்படும் பொழுதோ, தியானம் செய்யும் பொழுதோ, நமது மூளை ஒருவித அதிர்வலையை வெளியிட்டுக் கொண்டிருக்கும். இது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் கோவப்படும் பொழுதோ அல்லது சந்தோஷமாக இருக்கும் பொழுதோ, அந்த அதிர்வலைகளின் ஓட்டம்(Hz) அதிகமாக இருக்கும். இந்த நிலையில் வெளியாகும் அலைகளை Beta (14-30 Hz) என்று கூறுகிறோம்.

தியானத்தில் ஆழும் பொழுது, அந்த அதிர்வலைகள் குறைய ஆரம்பிக்கும். அடுத்த நிலையை Alpha (8-13.9 Hz) என்று கூறுகிறோம். ஆல்ஃபா தியானம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நிலையில் நம் மூளை விழித்த நிலையில் ஓய்வுரும். நம் உடலுக்குத் தேவையான Serotonin உற்பத்தியாகும்.

அடுத்த நிலையை அடைவதற்கு, நம் மூளையை நாம் 4-7.9 Hz அதிர்வலைக்குச் செலுத்த வேண்டும். இந்த நிலையை Theta என்று சொல்வார்கள். நீங்கள் உறங்கும் பொழுதோ அல்லது மிக ஆழ்ந்த தியானத்தில் தான் இந்த நிலையை அடைய முடியும். இதை REM (Rapid Eye Movement) sleep என்றும் கூறலாம். இந்த நிலையை அடையும் பொழுது, நினைவாற்றலுக்குத் தேவையான சுறப்பிகள் உற்பத்தியாகும்.

அடுத்த நிலையான Delta (0.1-3.9 Hz)வை அடையும் பொழுது நீங்கள் பறம்பொருளை/பிறபஞ்சத்தை அடைந்திருப்பீர்கள். இந்த நிலையில் உங்களது உடலை மறவீர்கள். இதை நாம் நமது ஆழ்ந்த உறக்கத்திலும் அடையலாம், ஆழ்ந்த தியானத்திலும் அடையலாம். தியானத்தில் நாம் இந்த நிலையை அடையும் பொழுதுதான் அனைவரும் தாமும் பிரபஞ்சமும் ஒன்று என்று கூறுகிறார்கள். இதற்கு கடுமையான பயிற்சி தேவை.

மூளையின் இந்த அதிர்வுகள் ஒவ்வொரு நிலையிலும் (Beta, Alpha, Theta, Delta) எப்படி இருக்கும் என்பதை கீழே கொடுக்கப் பட்டுள்ள இந்த படத்தில் பார்க்கவும்.

Saturday, May 08, 2010

யூடியூப் 3D (Youtube 3D)

3DTVயைச் சுற்றி தற்பொழுது உலக அளவில் பல ஆராய்ச்சிகளும், முன்னேற்றங்களும் நடந்து கொண்டு வருகிறது. ஆங்கிலப் படங்களும் 3Dயில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வீட்டிலிருந்த படியே பல 3D நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழலாம். நம் நாட்டிலும் கூடிய சீக்கிரமே 3Dயில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். வீட்டிலுருந்த படியே 3D நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ பிரத்யேகமான கண்ணாடிகள் தேவைப்படும்.

இப்பொழுதே உங்களுக்கு வீட்டில் இருந்தபடியே 3D வீடியோக்கள் பார்க்க வேண்டுமென்றால், யூடியூப் உங்களுக்கு கைகொடுக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோ பார்க்கவும். இதில் "3D" என்ற "Option"இல் "Cross-eyed" என்பதை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால், பிரத்யேகமான் கண்ணாடி இல்லாமலே 3Dயில் பார்க்கலாம் (ஆனால், இதற்கு உங்கள் கண்களை ஒருவிதமாக தையார் செய்ய வேண்டும். இது உங்கள் கண்களை பாதிக்கலாம்). இதற்கு நீங்கள் ஒரு கண்ணாடியை வாங்கிக் கொள்வது நல்லது.

http://www.youtube.com/watch?v=6RFuRY7azgA

Wednesday, May 05, 2010

ஆப்பிள் 'ஐ-பேட்'ன் மேல் ஏன் இந்த கொலை வெறி??? :)

ஆப்பிள் ஐ-பேட் சந்தையில் வெளிவந்து 28 நாட்களில் 10,00,000 விற்று தீர்ந்துவிட்டது என்று செய்தி வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இவர்கள் ஒரு 'ஐ-பேட்'டை எந்த அளவுக்கு கொடுமைபடுத்துகிறார்கள் என்று நீங்களே பார்க்கவும் :)

என்னா வில்லத்தனம்....

New iPad Test - Will It Shred? from FUEL TV on Vimeo.

Sunday, May 02, 2010

ஆப்பிள் ஐ-போனில் லினக்ஸ்

சமீபத்தில் "ஆண்ட்ராய்ட்" (Android) எனும் கூகிளின் லினக்ஸ் பதிப்பை ஆப்பிள் ஐ-ஃபோனில் இயங்கும் படிச் செய்திருக்கிறார்கள் ஆப்பிள் விரும்பிகள். தற்பொழுது ஐ-ஃபோனின் முதல் தலைமுறை கைப்பேசிகளில் மட்டும் இயங்கும்படி உள்ளது. விரைவில் ஐ-ஃபோன் 3G-யிலும் ஆண்ட்ராய்ட் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். எனது அலுவலகத்தில் நண்பர் ஒருவர் தனது ஐ-ஃபோனில் ஆண்ட்ராய்ட் பதிப்பை நிறுவியிருந்தார். உபயோகித்துப் பார்க்கும் பொழுது நன்றாக இருப்பதாகவே உணர்ந்தேன். இதன் தொடுதிரை பிற கைப்பேசிகளை விட உபயோகிப்பதற்கு நன்றாக இருக்கிறது.

ஐ-ஃபோனிற்குரிய ஆண்ட்ராய்ட் கோப்புகள் இங்கே உள்ளது.

ஐ-ஃபோனில் இயங்கும் ஆண்ட்ராய்டை கீழே உள்ள வீடியோவில் பார்க்கவும்.


கொரியன் படங்கள்

நீங்கள் உலகத் திரைப்படங்கள் பார்ப்பவர் என்றால் கண்டிப்பாக கொரியன் படங்கள் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு கொரியன் படத்தைப் பார்க்கும் பொழுதும் அடுத்து எந்த படம் பார்க்கலாம் என்றே எண்ணத் தோன்றும். கீழே கொடுக்கப் பட்டவை அனைத்தும் நான் பார்த்து ரசித்த படங்கள்...

- Old boy
- 200 Pounds Beauty
- Sympathy for Mr.Vengence
- Bin Jip
- My sassy girl
- Windstruck
- Joint Security Area.