Tuesday, November 03, 2009

மார்க்ஸ் சகோதரர்கள்!!!

அதிகமாக ஆங்கில திரைப்படங்கள் பார்ப்பவர்களுக்கு மார்க்ஸ் சகோதரர்களைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. 1930களில் தரமான காமெடி படங்களைத் தந்த பெருமை இவர்களைச் சாறும். யூத மதத்தைச் சேர்ந்த மார்க்ஸ் குடும்பத்தினரில் ஐந்து சகோதரர்கள் ஒன்றாக சேர்ந்து பல நகைச்சுவைத் திரைப்படங்களை கொடுத்தவர்கள். இவர்களது பெயர் Chico, Harpo, Groucho, Gummo மற்றும் Zeppo ஆகும். இவர்களில் Gummo மற்றும் Zeppo அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை. அவர்கள் வேறு துறையை தேடிச் சென்றனர். ஆனால் Chico, Harpo மற்றும் Groucho பல படங்களில் காமெடியில் கலக்கி எடுத்திருப்பார்கள்.

இவர்கள் நடித்தது 27 படங்கள் தான். அதிலும், இந்த மூன்று சகோதரர்களும் சேர்ந்து நடித்தது 16 திரைப்படங்கள். அதில் 5 திரைப்படங்கள் American Film Institute (AFI) தயாரிக்கும் "முதல் 100 காமெடி திரைப்படங்கள்" பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இவர்கள் நடித்த "Duck Soup" என்னும் திரைப்படத்தைப் பார்த்தேன். 1930களில் இவர்கள் காமெடி வசனத்தில் அசத்தியிருப்பார்கள். அதிலும் ஒரு சகோதரர் (Harpo) வசனமே பேச மாட்டார். Groucho நம்ம வடிவேலு போல மீசையை வரைந்திருப்பார். அத்திரைப்படத்தில் இருந்து ஒரு காமெடி காட்சியை கீழே காணலாம்.

Friday, September 25, 2009

ஏ.ஆர்.ரஹ்மானின் 'Couples Retreat' படத்தின் இசை

'Slumdog Millionaire' படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் அடுத்த ஆங்கில மொழிப் படம் 'Couples Retreat'. இது ஒரு நகைச்சுவைத் திரைப்படம். அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான பாடல்கள் மற்றும் பின்னனி இசையை http://www.couplesretreatsoundtrack.com/ இங்கு கேட்டு மகிழலாம்.

இதுவரை ரஹ்மான் இசையமைத்து வந்த ஆங்கில படங்கள் அனைத்தும் இந்தியாவை (Bombay Dreams, Slumdog Millionaire) தழுவியே எடுக்கப்பட்டவை. அதனால், அந்தப் பாடல்கள் அனைத்தும் இந்திய ரகங்களிலேயே அமைந்திருக்கும். ஆனால், இந்தப்படம் தான் அவரை இந்திய இசையிலிருந்து வெளியே கொண்டு வருகிறது.

இந்த படத்தின் trailer கீழே கொடுக்கப்பட்டுள்ளது:


குறிப்பு: ரஹ்மான் ரசிகர்களுக்கு, அவரின் பேட்டி CNN-IBN தொலைக்காட்சியில் சனிக்கிழமை (26/9/2009) இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

Tuesday, June 09, 2009

நான் பார்த்த முதல் தென் கொரியன் படம் - Old boy

தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி படங்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு தென் கொரியன் படமான "Old boy"ஐ அறிமுகப்படுத்தினார் எனது நண்பர். படத்தை பார்த்து முடித்துவிட்டு இரண்டு நாட்கள் அதிர்ச்சியில் இருந்தேன். காரணம், இது மாதிரியான படம் ஒன்றை நான் இதுவரை கண்டிருக்கவில்லை. கதை அப்படிப்பட்டது.

கதைச் சுருக்கம்: படத்தின் தொடக்கத்திலேயே, ஹீரோ கடத்தப்படுகிறார். ஹீரோவிற்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரை 15 வருடங்களாக ஒரு அறையில் அடைத்து வைத்து விடுகின்றனர். ஹீரோவிற்கு தன்னை யார், எதற்காக கடத்தினார்கள் என்று தெரியவில்லை (நமக்கும் தான்). 15 வருடங்களுக்குப் பிறகு அவரை சிறையிலிருந்து விடுவிக்கின்றனர். தன்னை அடைத்து வைத்தவனை கண்டுபிடிக்கும் வெறியில் ஹீரோ அலைகிறார். ஒரு உணவகத்தில் சமையல் செய்யும் பெண்னை சந்திக்கிறார். நாட்கள் ஆக ஆக இருவருக்கும் காதல் வளர்ந்து முற்றி விடுகிறது.

இதற்கிடையில், தன்னை அடைத்து வைத்தவனைப் பற்றி துப்பு துளக்குகிறார். அவன் தன்னுடைய கல்லூரியில் படித்தவனென்று கண்டுபிடித்து விடுகிறார். பழைய கதையை நினைத்துப் பார்க்கிறார். அந்த வில்லனும் அவனது தங்கையும் காதல் செய்துகொண்டிருக்கின்றனர். அதை ஹீரோ பார்த்துவிட்டு தன் நண்பர்களிடம் கூறுகிறார். இதனால் பயமுற்ற அந்த பெண் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் ஆத்திரமுற்ற அவளது அண்ணன் (காதலன்) ஹீரோவை பழி வாங்கவே அவனை 15 வருடங்கள் சிறை வைத்துள்ளான். ஆனால், ஏன் 15 வருடங்கள்? ஹீரோ காதல் செய்த பெண் யார்? இதற்கான விடையை நீங்கள் படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள். :)

Thursday, May 28, 2009

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த எல்லை பாதுகாப்பு படைக்கான பாடல்

ஏ.ஆர்.ரகுமான் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையிரனுக்காக ஒரு பாடலை இசையமைத்துள்ளார். பாடல் படமாக்கப் பட்ட விதம் உண்மையான சண்டைக் காட்சிகளைப் போலவே அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக தீவிரவாதிகளிடம் சண்டையிடுவதாகவே அமைந்துள்ளது.

இருந்தாலும், இந்த பாடலில் அவர் ஏற்கனவே இசையமைத்த "போஸ் - தி ஃபர்காட்டன் ஹீரோ" என்ற இந்தித் திரைப்படப் பாடலின் இசையையே உபயோகித்துள்ளார். கீழே, முதலில் போஸ் படப் பாடலையும், அதன் கீழே எல்லை பாதுகாப்புப் படையினரின் பாடலையும் காணலாம்.

போஸ் படத்தின் பாடலை ஏ.ஆர்.ரகுமானே பாடியது போல், அவரே இந்தப் பாடலையும் பாடியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.



Friday, May 22, 2009

பிரபாகரன் அவர்கள் பிபிசிக்கு அளித்த செவ்விகள்

பிரபாகரன் இறந்தாரா உயிருடன் இருக்கிறாரா என்று மக்கள் குழம்பிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், பிரபாகரன் 1987, 1991, 1994, 1995 ஆண்டுகளில் பிபிசிக்கு அளித்த செவ்விகளை இங்கு கேட்கலாம். (http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/05/090518_prabaiw.shtml)

இதில், அவர் இறுதி மாவீரர் நாளில் அளித்த செவ்வியையும் கேட்கலாம்.

Wednesday, May 06, 2009

உதகமண்டலம் ஏரியின் தற்போதைய நிலை...

சென்னையின் கொடூர வெயிலில் இருந்து தப்பி உதகமண்டலம் சென்று சற்று இளைப்பாறிவிட்டு வரலாம் என்று என் நண்பர்களுடன் சென்றிருந்தேன். அறைக்குச் சென்று குளித்துவிட்டு உதகை ஏரிக்குச் செல்லலாம் என்று கிளம்பினோம். என் நண்பர்கள் படகு சவாரி செய்ய ஆசைப்பட்டார்கள். எனக்கு ஏனோ படகு சவாரி செய்ய வேண்டும் என்று தோனவில்லை. அவர்களை வழியனுப்பி விட்டு நானும் எனது மற்றொரு நண்பனும் அவர்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம்.

அப்பொழுதுதான் ஏரியை நன்கு கவனித்தேன். கரையோரம் இரண்டு மீண்கள் இறந்துகிடந்தன. அருகிலிருந்த படகோட்டியிடம் கேட்ட பொழுதுதான் தெரிந்தது, ஊட்டி ஏரியிலும் பாழாய்போனவர்கள் கழிவுநீரை கலந்துவிட்டனர்.


ஒன்றும் சொல்வதற்கில்லை!!! நீங்களும் ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய நெர்ந்ததெனில், கையை ஏரியில் விட்டு விடாதீர்கள். நிறைய பேர் இதை அறியாமல் ஏரியின் நீரில் கையை வைத்து விளையாடுகிறார்கள்.

Saturday, January 31, 2009

ரஹ்மான் உபயோகப் படுத்தும் புதுவிதமான இசைக் கருவி

ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு எவ்வளவு பாடுபடுகிறோமோ, அந்த இடத்தை அடைந்த பிறகு அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள அதே போல் பாடு படவேண்டும். அதை ரஹ்மான் சரியாகச் செய்வதாகவே எனக்கு தோன்றும். காரணம், புதிய முயற்சிகள் பலவற்றை அவர் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்.

தற்பொழுது, ரஹ்மான் மேற்கொண்ட புதிய முயற்சி, University of Illinoisயில் பனிபுரியும் பேராசிரியர் புதிதாக வடிவமைத்த "Continuum fingerboard" என்கிற இசைக் கருவியை இந்திய இசைத் துறைக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். இந்த இசைக் கருவி பார்ப்பதற்கு keyboard போல் நீளமாக இருக்கும். ஆனால், கருப்பு வெள்ளை கட்டைகள் இருக்காது.


இந்தக் கருவி சொந்தமாக இசையை வெளிப்படுத்தாது. இதை ஒரு midi-synthesizerவுடன் இணைத்துவிட்டு நாம் இந்த கருவியை வாசிக்க வேண்டும். நம் விரல் movementsஐப் பொறுத்து, இந்தக் கருவி synthesizerக்கு சில தகவல்களை அனுப்பும். அந்தத் தகவல்களைப் பொறுத்து synthesizer இசையை வெளிப்படுத்தும்.

கீபோர்ட் மூலம் கர்னாடிக் இசையை கச்சிதமாக உருவாக்க முடியாது. ஆனால், இந்தக் கருவியின் மூலம் அது சாத்தியம் என்கிறார் ரஹ்மான்.

“I fell in love with keyboard playing as a young boy, but I was frustrated because I could not play [Indian] classical music on keyboards because of the limitations of the keys which never let micro-intonation of notes,” he said at the Chicago area concert. “So recently I discovered something that was quite a revelation for me—the Continuum Fingerboard, invented right here in Illinois by University of Illinois Professor Mr. Lippold Haken!”
Courtesy: http://www.ece.illinois.edu/news/headlines/hl-fingerboard.html

இந்தக் கருவியை தற்பொழுது வெளியாகியுள்ள Delhi-6 என்னும் ஹிந்தி படத்தில் வரும் "Rehna tu" என்னும் பாடலின் இருதியில் உபயோகித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்கவும்.