Tuesday, June 09, 2009

நான் பார்த்த முதல் தென் கொரியன் படம் - Old boy

தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி படங்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த எனக்கு தென் கொரியன் படமான "Old boy"ஐ அறிமுகப்படுத்தினார் எனது நண்பர். படத்தை பார்த்து முடித்துவிட்டு இரண்டு நாட்கள் அதிர்ச்சியில் இருந்தேன். காரணம், இது மாதிரியான படம் ஒன்றை நான் இதுவரை கண்டிருக்கவில்லை. கதை அப்படிப்பட்டது.

கதைச் சுருக்கம்: படத்தின் தொடக்கத்திலேயே, ஹீரோ கடத்தப்படுகிறார். ஹீரோவிற்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரை 15 வருடங்களாக ஒரு அறையில் அடைத்து வைத்து விடுகின்றனர். ஹீரோவிற்கு தன்னை யார், எதற்காக கடத்தினார்கள் என்று தெரியவில்லை (நமக்கும் தான்). 15 வருடங்களுக்குப் பிறகு அவரை சிறையிலிருந்து விடுவிக்கின்றனர். தன்னை அடைத்து வைத்தவனை கண்டுபிடிக்கும் வெறியில் ஹீரோ அலைகிறார். ஒரு உணவகத்தில் சமையல் செய்யும் பெண்னை சந்திக்கிறார். நாட்கள் ஆக ஆக இருவருக்கும் காதல் வளர்ந்து முற்றி விடுகிறது.

இதற்கிடையில், தன்னை அடைத்து வைத்தவனைப் பற்றி துப்பு துளக்குகிறார். அவன் தன்னுடைய கல்லூரியில் படித்தவனென்று கண்டுபிடித்து விடுகிறார். பழைய கதையை நினைத்துப் பார்க்கிறார். அந்த வில்லனும் அவனது தங்கையும் காதல் செய்துகொண்டிருக்கின்றனர். அதை ஹீரோ பார்த்துவிட்டு தன் நண்பர்களிடம் கூறுகிறார். இதனால் பயமுற்ற அந்த பெண் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் ஆத்திரமுற்ற அவளது அண்ணன் (காதலன்) ஹீரோவை பழி வாங்கவே அவனை 15 வருடங்கள் சிறை வைத்துள்ளான். ஆனால், ஏன் 15 வருடங்கள்? ஹீரோ காதல் செய்த பெண் யார்? இதற்கான விடையை நீங்கள் படத்தைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள். :)