Saturday, October 04, 2008

மதுரை "கோ கார்ட்" பிரியர்களுக்கு ஒரு நல்ல சேதி

ஆமாண்ணே!!!

சென்னையில அடிக்கடி "Go Cart" ஓட்டி பழக்கமாயிடுச்சி. விடுமுறைக்காக இப்போ 5 நாள் மதுரையில இருக்கும் போது, என்னோட நண்பர் மதுரையிலயும் "கோ கார்ட்" இருப்பதாக சொன்னார். என்னடா இது? புதுசா இருக்கேன்னு கிளம்பி போனேன். சும்மா சொல்லக்கூடாது. நல்லாத்தான்யா இருக்கு. ட்ராக் நல்லா வளைஞ்சி வளைஞ்சி போறதுனால நல்லாவே இருக்கு. எங்க இருக்குன்னு கேக்குறீகளா. ரிங் ரோட்ல இருந்து சிவகங்கை சாலையில திரும்புனவுடனே வலது கை பக்கமா இருக்குங்க. அஞ்சு நிமிடத்துக்கு ரூ.75/- வசூலிக்கிறாங்க. ஊருக்கு வந்தீயன்னா முயற்சி பண்ணி பாருங்க.


அப்படியே, மதுர காரவுக யாராவது இத படிச்சீகன்னா, மதுரையில "Bowling alley" எங்கயாவது இருந்ததுன்னா தெரியப்படுத்துங்க.

4 comments:

தருமி said...

எல்லாம் பெரிய இடத்து விசயமால்ல இருக்கு ..

astro said...

thamilbest இல் இணைக்கப்பட்டிருந்தது.

cheena (சீனா) said...

ஒரு மணி நேரத்துக்கு 900 ரூபாயா - ஓஓஓ - சரி சரி அடுத்த வேலையெப் பாப்போம்

அடுத்து எப்போ மதுரைக்கு வரீங்க ?

சந்திக்கலாமே !

Alexander said...

சந்திக்கலாம் நண்பரே! அடுத்தது தீபாவளிக்குத் தான் வருவேன்.