Tuesday, May 20, 2008

ரோபோடிக்ஸ் பிரியர்களுக்கு...

சிறு வயதிலிருந்து பலருக்கு ரோபோக்கள் மேல் ஆர்வம் அதிகம் இருந்திருக்கும். ஆங்கில சினிமாக்களில் பார்த்து குதூகலித்திருந்தோம். வெளி நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ரோபோக்கள் செய்து மகிழும் நபர்கள் மிகவும் குறைவு தான். எனினும், சமீப காலமாக இந்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒரு ரோபோவை உருவாக்க mechanical மற்றும் electronics துறையில் அனுபவம் இருக்க வேண்டும். தவிர creative mind வேண்டும். சிறு குழந்தைகள் ரோபோ வடிவமைத்து ப்ரோக்ராம் பன்னும் அளவிற்கு ஒரு Robotics kitஐ, Lego நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதை மேலை நாடுகளில் 10 வய்து சிறுவர் சிறுமியர் வாங்கி வித விதமாக ரோபோக்களை உருவாக்கி வெளுத்து கட்டுகிறார்கள்.

எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. சென்ற முறை அமெரிக்கா சென்ற பொழுது வாங்கி வந்தேன். வார விடுமுறைகள் இப்பொழுது திருப்திகரமாக கரைகிறது.

நீங்களும் இதை வாங்க எண்ணினால் எனது ஆங்கில பதிவான இங்கு http://lexos.blogspot.com/2008/02/my-lego-mindstorms-nxt-kit.html செல்லவும். கூடுதல் விவரங்கள் கிடைக்கும்.

நான் உருவாக்கிய சில ரோபோக்களை கீழே கொடுக்கப் பட்டுள்ள யூ-டியூப் வீடியோக்களை பாருங்கள்.




3 comments:

யாத்ரீகன் said...

thats sexy... i came to know about these stuffs via one of my friends and was amazed about things that the kids over here get to play with ... probably if time permits you can write something about the kit in tamil...

சி தயாளன் said...

பரவாயில்லை...இப்போது பலருக்கு ரோபோட்டிக்ஸ் மேல் ஆர்வம் வரத்தொடங்கியிருப்பது நல்ல அறிகுறி..

தமிலு வலய்ப்பதிவு said...

தமிழில் ரோபோடிக்ஸ்
April 27, 2015 ·
Basics of Robotics 1-எந்திரனின் அடிப்படைகள் 1
ரோபோக்களை வடிவமைப்பது நாம். அதன் அசைவுகள், சிந்தனைகள், உணர்வுகள் என ஒவ்வொன்றையும் வடிவமைப்பது நாம்தான். அதை சரியான விதத்தில் உருவாக்குவதும், கற்றுக் கொள்ள வைப்பதும், கட்டுப்படுத்துவதும், இயக்க வைப்பதும், இன்ன பிறவும் நம் பொறுப்பு.
ஒரு எந்திரனை எப்படி உருவாக்குவது, எப்படி கட்டுப்படுத்துவது?
அதற்கு மிகவும் அடிப்படையான தகவல்கள் சிலவற்றை நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்..

https://www.facebook.com/tamilrobotics/posts/869774666401622?fref=nf