Thursday, November 10, 2011

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்

தாராசுரம் என்றொரு ஊர். கும்பகோணத்திலிருந்து 3 கிமீ தூரத்தில் உள்ளது. இங்குள்ள‌ புகழ் பெற்ற ஐராவதேஸ்வரர் கோவில், 12ம் நூற்றாண்டில் இரண்டாம் இராசஇராச சோழனால் கட்டப்பெற்றது. மிகவும் அழகான சிற்பங்களைக் கொண்டது. 'யுனெஸ்கோ'வால் அங்கீகரிக்கப் பெற்று 'இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழக'த்தால் பராமரிக்கப் பெற்று வருகிறது. சோழர்கள் கட்டிய முப்பெரும் கோயில்களில் இதுவும் ஒன்று. மற்றவை தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகும்.

இங்கு வடிவமைக்கப் பட்டுள்ள பல சிற்பங்கள், அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் நிலையை விளக்குகிறது. 

கீழே உள்ள படங்களைக் காணவும்.

Darasuram Slideshow: Alexander’s trip to Kumbakonam, Tamil Nadu, India was created by TripAdvisor. See another Kumbakonam slideshow. Take your travel photos and make a slideshow for free.


Tuesday, November 08, 2011

காஷ்மிர் மக்களின் மூதாதையர்கள் யார்??? (இஸ்ரேலியர்கள்) !

காஷ்மிர் மக்களின் தோற்றமும் பண்புகளும் இந்திய மக்களை விட்டு மாறுபட்டிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நானும் சற்று சந்தேகம் அடைந்திருந்தேன். சமீபத்தில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். அதில், காஷ்மிர் மக்கள், இஸ்ரேலில் இருந்து பிரிந்து வந்தவர்கள் (The lost tribes of Israel) என்று அறியப்படுகிறது. சுமார் 722 BCE ஆண்டுகளுக்கு முன்பு Silk Route மூலம் காஷ்மிரை வந்தடைந்ததாகக் கூறப்ப்டுகிறது. இதை என்னால் முதலில் நம்ப முடியவில்லை என்றாலும், இதற்கான அத்தாட்சிகள் நிறையவே இருக்கிறது. காஷ்மிரில் உள்ள பல இடங்கள் 'ஹீப்ரூவ்' வார்த்தைகளை (Har Nevo, Beit Peor, Pisga, Heshubon) அடிப்படையாகக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இன்னும், மோஸஸ்ஸின் (Moses) சமாதி காஷ்மிரில் உள்ளதாகக் தெரிகிறது. பைபிளில் வரும் அரசர் சாலமன் காஷ்மிரில் உள்ள மக்களை வழி நடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதற்கு சாட்சியாக ஸ்ரீநகரில் Solomon Throne இருக்கிறதாம்.

"காஷ்மிர்", "இஸ்ரேல்" ஆகிய வார்த்தைகளை கூகிளில் செலுத்திப் பார்த்தீர்கள் என்றால், நிறைய கட்டுரைகள் காணக் கிடைக்கிறது. அதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.


இங்கே நான் எழுதியது என்னுடைய கருத்துக்கள் அல்ல. நான் படித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டேன். இது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்.