Thursday, March 20, 2008

ஸ்லிங் பாக்ஸ்

இணையம் உருவானதில் இருந்து உலகம் சுறுங்கி விட்டது. வீட்டில் இருந்த படியே எல்லாம் செய்துவிடலாம். அதே மாதிரி, வெளியூருக்கு போன பிறகு, உங்கள் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியில் வரும் நிகழ்ச்சிகளை பார்க்க விரும்பினால்? அதற்கு விடை அளிக்கிறது "Sling Box". இந்த கருவியை உருவாக்குவது "Sling Media" என்றொரு நிறுவனம்.

"Sling box" என்பது ஒரு கணினி "bridge" அளவிற்கு இருக்கும். உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள Video/Audio out ஐ எடுத்து இந்த பெட்டியில் சொருக வேண்டும். பிறகு, இதில் உள்ள ethernet interface மூலம் இணையத்தில் இணைத்து விடுங்கள். இப்பொழுது உங்கள் வீட்டு தொலக்காட்சி நிகழ்ச்சிகளை எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம்.

இணையத்தில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு "Sling Player" என்ற மென்பொருள் தேவை. இதை உங்கள் கணினியிலோ, அல்லது "Pocket PC"யிலோ நிறுவ வேண்டும். ஒவ்வொரு ஸ்லிங் பாக்ஸிற்கும் ஒரு "Finder ID" உண்டு. இந்த எண்னை இந்த மென்பொருளில் செலுத்தினால், உங்கள் ஸ்லிங் பாக்ஸுடன் தொடர்பு ஏற்படுத்தி, உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கணினியிலோ, கையடக்க கணினியிலோ காண்பிக்கும்.

இடையில், வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று நினைத்தால்? அதற்கும் இதில் விடை இருக்கிறது. ஸ்லிங் பாக்ஸுடன் ஒரு IR sensor உம் வருகிறது. இதை இந்த பெட்டியுடன் இணைத்து மறுமுனையை உங்கள் தொலைக்காட்சி முன் வைத்து விட வேண்டும். ஸ்லிங் ப்ளேயர் மென்பொருளில் உள்ள remoteஐ பயன் படுத்தி நிகழ்ச்சிகளை மாற்றி பார்க்கலாம்.

இது இந்தியாவில் பயன் படுத்துவதற்கு அதிவேக இணையம் தேவை. இது அமேரிக்கச் சந்தைகளில் $100க்கு கிடைக்கும்.

மேலும் தகவல்கள் அறிய, http://electronics.howstuffworks.com/slingbox.htm/printable

2 comments:

வடுவூர் குமார் said...

அட!
இணைய வேகம் முக்கியமாகி போச்சே! நம்மூரில் அதானே பிரச்சனை.

பிரேம்ஜி said...

நல்ல தகவல்.