Saturday, March 01, 2008

ப்ளூ-ரே வென்றது

டோஷிபாவும் சோனியும் சென்ற வாரம் வரை மல்லுக்கட்டிக் கொண்டுருந்தனர். காரணம், இருவரும் வெவ்வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தித் தயாரிக்கும் DVDக்கு அடுத்தபடியான குறுந்தட்டைத் தான். டோஷிபா, தனது HD DVD (High-Definition DVD)ஐ சந்தையில் அறிமுகப்படுத்தியது. இது சாதாரனமாக நாம் பயன்படுத்தும் DVDஐ விட 3.5 மடங்கு தகவலைத் தேக்க முடியும். இக்குறுந்தட்டை அடிப்படையாகக் கொண்டு HD DVD playersயும் வர ஆரம்பித்தது. மக்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள். HD DVDயில் வெளி வரும் படங்களும் விலை மிகுதியாக இருந்தது.

இதற்கிடையில், சோனி நிறுவனத்தின் Blu-Ray Disc, HD DVDஐ விட அதிக தகவலைத் தேக்க முடியும் என்று நிரூபித்தது. விளைவு, டோஷிபா தோற்றது. சென்ற வாரம், இனி HD DVD உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. இதனால், HD DVD playersஐ வாங்கியவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

சோனியின் Blu-Ray தொழில்நுட்ப்பத்தைப் பயன் படுத்தி 50GB வரை தகவலைத் தேக்கமுடியும். எப்படியென்றால், தகவலைத் தேக்க ப்ளூ லேசர் பயன்படுத்தப் படுகிறது. இதன் wavelength சிகப்பு நிற லேசரை விட குறுகியது. ஆதலால், data density அதிகமாகக் கிடைக்கும்.

ஆனால், இந்த ப்ளூ லேசரிற்கு அதிக மின்சாரம் தேவையாம். முன்பு, லேப்டாப்பில் ப்ளூ-ரே ட்ரைவை பொறுத்தி உங்களால் ஒரு முழூ படத்தைக் கூடப் பார்க்க முடியாது. தற்பொழுது, இதை சரி செய்யும் விதத்தில் அதன் சர்க்யூட்டில் மாற்றம் செய்து, படத்தை டீ-கோட் செய்ய nVidia மற்றும் ATI கார்டுகளை பயன் படுத்துகின்றனர்.

இந்தியாவில் இன்னும் இத்தொழில்நுட்பம் எவ்வளவு பிரபலமாகியுள்ளது என்று தெரியவில்லை.சற்று நாட்கள் பொறுத்து கணினி வாங்கினீர்களென்றால், ப்ளூ-ரே பொறுத்தப் பட்ட கணினியை வாங்கவும்!!!

ப்ளூ-ரே டிஸ்க்

1 comment:

தென்றல் said...

பயனுள்ள தகவல்!

நன்றி, அலெக்ஸ்சாண்டர்!