Showing posts with label தொழில் நுட்பம். Show all posts
Showing posts with label தொழில் நுட்பம். Show all posts

Tuesday, June 08, 2010

வருகிறது ஐ9000

ஐ9000 என்றவுடன் ஏதோ ஹுண்டாயின் புதிய வண்டி என்று எண்ணிவிட வேண்டாம். இது சாம்சங் (Samsung) நிறுவனம் புதிதாக வெளிவிடவிருக்கும் செல்பேசி. இது சந்தையில் இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதில் அப்படி என்ன பிரமாதம் இருக்கப் போகிறது என்று எண்ணிவிட வேண்டாம். உண்மையிலேயே இதில் கூறுவதற்கு அதிகம் இருக்கிறது. ஆண்ட்ராய்டு (Android 2.1) இயக்கியை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியிருக்கும் செல்பேசிகளில் இது முதல் இடத்தைப் பிடிக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

இதில் உள்ள புதிய சேவைகள் என்ன என்று பார்க்கலாம்:
  • 4" AMOLED capacitive touchscreen.
  • 1 GHz CPU.
  • 5 MP camera.
  • 720p video recording at 30fps.
  • Bluetooth 3.0.
  • HD xVid playback.
  • Accelerometer.
  • Swype predictive text input.
இந்த செல்பேசியைப் பற்றி மேலும் அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.



இதன் விலை தற்பொழுது நியமிக்கப் படவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

Saturday, May 08, 2010

யூடியூப் 3D (Youtube 3D)

3DTVயைச் சுற்றி தற்பொழுது உலக அளவில் பல ஆராய்ச்சிகளும், முன்னேற்றங்களும் நடந்து கொண்டு வருகிறது. ஆங்கிலப் படங்களும் 3Dயில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வீட்டிலிருந்த படியே பல 3D நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழலாம். நம் நாட்டிலும் கூடிய சீக்கிரமே 3Dயில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். வீட்டிலுருந்த படியே 3D நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ பிரத்யேகமான கண்ணாடிகள் தேவைப்படும்.

இப்பொழுதே உங்களுக்கு வீட்டில் இருந்தபடியே 3D வீடியோக்கள் பார்க்க வேண்டுமென்றால், யூடியூப் உங்களுக்கு கைகொடுக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் வீடியோ பார்க்கவும். இதில் "3D" என்ற "Option"இல் "Cross-eyed" என்பதை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால், பிரத்யேகமான் கண்ணாடி இல்லாமலே 3Dயில் பார்க்கலாம் (ஆனால், இதற்கு உங்கள் கண்களை ஒருவிதமாக தையார் செய்ய வேண்டும். இது உங்கள் கண்களை பாதிக்கலாம்). இதற்கு நீங்கள் ஒரு கண்ணாடியை வாங்கிக் கொள்வது நல்லது.

http://www.youtube.com/watch?v=6RFuRY7azgA

Wednesday, March 19, 2008

கூகிள் ஸ்கெட்ச் - அப்

கட்டிடத் துறையில் வேலை செய்வோர் கட்டிடங்களை கணினியில் வடிவமைக்க அதிக அளவில் பயன்படுத்துவது, CAD மென்பொருள். எனினும், இந்த மென்பொருளைக் கொண்டு மிகவும் தேர்ந்தவர்கள் மட்டுமே சிறந்த முறையில் கட்டிடங்களை வடிவமைக்க முடியும். ஆனால், கூகிள் ஸ்கெட்ச் - அப் அப்படியில்லை. சாதாரன கட்டிடக் கலையைப் பற்றி எதுவுமே அறியாதவர்கள் கூட இதில் modelகளை உருவாக்கலாம். ஒரு நாள் சும்மா இந்த மென்பொருளை உபயோகித்து பார்க்கலாம் என்று கீழே உள்ள இரு வீடுகளைக் கட்டினேன். :)


இந்த மென்பொருளில் முக்கியமாக உள்ளது "push/pull" டூள். இதை வைத்து சும்மா புகுந்து விளையாடலாம். இம்மென்பொருளை இலவசமாக இங்கு http://sketchup.google.com/ பதிவிறக்கம் செஞ்சிக்கோங்க.

பிறகென்ன, இனி நினச்ச நேரத்துக்கு விதவிதமா வீடு கட்டுங்க. இன்னொரு விசயம். உங்களோட வீட இதுல வடிவமைச்சு கூகிள் எர்த்துல export செஞ்சிடலாம்.

கலக்குங்க!!!

Saturday, March 01, 2008

ப்ளூ-ரே வென்றது

டோஷிபாவும் சோனியும் சென்ற வாரம் வரை மல்லுக்கட்டிக் கொண்டுருந்தனர். காரணம், இருவரும் வெவ்வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தித் தயாரிக்கும் DVDக்கு அடுத்தபடியான குறுந்தட்டைத் தான். டோஷிபா, தனது HD DVD (High-Definition DVD)ஐ சந்தையில் அறிமுகப்படுத்தியது. இது சாதாரனமாக நாம் பயன்படுத்தும் DVDஐ விட 3.5 மடங்கு தகவலைத் தேக்க முடியும். இக்குறுந்தட்டை அடிப்படையாகக் கொண்டு HD DVD playersயும் வர ஆரம்பித்தது. மக்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள். HD DVDயில் வெளி வரும் படங்களும் விலை மிகுதியாக இருந்தது.

இதற்கிடையில், சோனி நிறுவனத்தின் Blu-Ray Disc, HD DVDஐ விட அதிக தகவலைத் தேக்க முடியும் என்று நிரூபித்தது. விளைவு, டோஷிபா தோற்றது. சென்ற வாரம், இனி HD DVD உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. இதனால், HD DVD playersஐ வாங்கியவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

சோனியின் Blu-Ray தொழில்நுட்ப்பத்தைப் பயன் படுத்தி 50GB வரை தகவலைத் தேக்கமுடியும். எப்படியென்றால், தகவலைத் தேக்க ப்ளூ லேசர் பயன்படுத்தப் படுகிறது. இதன் wavelength சிகப்பு நிற லேசரை விட குறுகியது. ஆதலால், data density அதிகமாகக் கிடைக்கும்.

ஆனால், இந்த ப்ளூ லேசரிற்கு அதிக மின்சாரம் தேவையாம். முன்பு, லேப்டாப்பில் ப்ளூ-ரே ட்ரைவை பொறுத்தி உங்களால் ஒரு முழூ படத்தைக் கூடப் பார்க்க முடியாது. தற்பொழுது, இதை சரி செய்யும் விதத்தில் அதன் சர்க்யூட்டில் மாற்றம் செய்து, படத்தை டீ-கோட் செய்ய nVidia மற்றும் ATI கார்டுகளை பயன் படுத்துகின்றனர்.

இந்தியாவில் இன்னும் இத்தொழில்நுட்பம் எவ்வளவு பிரபலமாகியுள்ளது என்று தெரியவில்லை.சற்று நாட்கள் பொறுத்து கணினி வாங்கினீர்களென்றால், ப்ளூ-ரே பொறுத்தப் பட்ட கணினியை வாங்கவும்!!!

ப்ளூ-ரே டிஸ்க்

Friday, February 29, 2008

ஐபாடில் லினக்ஸை நிறுவ

ஐபாடை உபயோகிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு, அதன் எளிமையான வடிவமைப்பே காரணம். ஐபாடை இயக்கி வரும் இயக்கி 'ஆப்பிள்' நிறுவனத்திற்குச் சொந்தமானது.

ஐபாடை ஹாக் (hack) செய்து அதில் லினக்ஸை நிறுவினால்? அதற்கு வழி கொடுக்கிறது, http://www.ipodlinux.org/ என்கிற தளம். ஓபன் சோர்ஸை அடிப்படையாகக் கொண்டு, uClinux எனும் லினக்ஸ் கெர்னலை ஐபாடிற்கு மாற்றி எழுதியுள்ளனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை 'ஐபாட் நானோ'வைத் தவிர இங்கு கிடைக்கும் லினக்ஸை, மற்ற எல்லா வகை ஐபாடிலும் நிறுவலாம்.

பிறகென்ன? லினக்ஸை நிறுவி, பின் உங்கள் சொந்த applicationனை re-compile செய்து ஐபாடில் நிறுவி ஜமாயுங்கள். ஆனால், லினக்ஸை நிறுவும் பொழுது ஜாக்கிரதையாக நிறுவவும். தவறாக ஏதாவது செய்தால், உங்கள் ஐபாடை பிறகு பயன்படுத்தவே முடியாமல் போய்விடும்.

Thursday, February 14, 2008

ஸ்டீவ் ஜாப்ஸ்

இன்று, ஐபாடை (iPod) உபயோகப் படுத்துபவர்களில் பாதி பேருக்கு "ஸ்டீவ் ஜாப்ஸ்" என்றால் யார் என்றே தெரியாது. இவர் தான் ஆப்பிள் நிறுவன‌த்தின் இன்றைய அதிபர் (CEO). இவர் ஆப்பிள் நிறுவனத்தை, 1976ல் Steve Wozniak என்பவருடன் சேர்ந்து நிறுவினார்.

இவர் உலகள‌வில் ஏகப்பட்ட மக்களை தனது அழகு மிகுந்த படைப்புகளால் (Machintosh, iPod, iPhone) கவர்ந்துள்ளார். எனினும், இவர் தான் நிறுவிய நிறுவனத்திலிருந்தே, தனது கோபத்தாலும், அடக்கியாளும் குணத்தாலும் துறத்தப்பட்டார். வெளியில் வந்த பிறகு, "நெக்ஸ்ட்" என்று ஒரு கம்பெனி ஆரம்பித்தார்.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுது, ஜாப்ஸின் "நெக்ஸ்ட்" நிறுவனத்தை ஆப்பிள் கம்பூட்டர்ஸ் வாங்கியது. ஜாப்ஸும் ஆப்பிள் நிறுவனத்தின் CEO ஆனார்.

இவரைப் பற்றி, iCon என்றொரு புத்தகம் வெளியானது. இதில், இவரைப் பற்றிய ஏடாகூடமான செய்திகள் வெளியானதால், அதை வெளிவராமல் செய்தார். ஆனாலும், அதை நம்மூரில் பழைய புத்தகக் கடை ஒன்றில் கண்டு, அதை வாங்கிப் படித்தேன். நன்றாக இருந்தது.

இவரைப் பற்றி மேலும் தகவல்கள் அறிய, Steve Jobs