Wednesday, October 01, 2008

P1i ஹாக்ஸ் - 1

சென்ற பதிவில் P1i செல்பேசி வாங்கியதாக எழுதியிருந்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த செல்பேசி என்னிடம் நல்ல பெயரே வாங்கியுள்ளது. Symbian இயக்கி microkernel என்பதால், இதன் வேகம் சற்று குறைவாகவே இருக்கும் என்று எண்ணினேன். இதில் இருக்கும் ஒவ்வொரு சேவையும் ஒவ்வொரு அப்ளிகேஷனாகவே அமைக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் ஒரு SMS அனுப்பவேண்டும் என்றால், ஒரு அப்ளிகேஷன் இயங்க வேண்டும். நீங்கள் SMS அனுப்பியவுடன் அந்த அப்ளிகேஷன் மெமரியிலேயே இருக்கும். இவ்வாறு நீங்கள் இயக்கிய ஒவ்வொரு அப்ளிகேஷனும் மெமரியிலேயே இருக்கும். காரணம், "Symbian supports multi-tasking". பல அப்ளிகேஷன் இயங்கும் பொழுதும் இதன் வேகம் குறைவதாக தெரியவே இல்லை. இதற்கு சான்றாக இந்த வீடியோவை பார்க்கவும்.



எனினும், "Contacts" மற்றும் "Messaging" அப்ளிகேஷனின் வேகம் சற்று குறைவாகவே உள்ளதாக எண்ணினேன். இணையத்தில் தேடிப் பார்த்ததில், இதற்கு ஏற்கனவே தீர்வு இருப்பதை அறிந்தேன், http://www.uiqblog.com/2008/05/09/speed-boost-for-your-uiq3-phone/ இந்த ஹாக்கை என்னுடைய புதிய செல்பேசியில் நிறுவுவதற்கு சற்று தயக்கமாகவே இருந்தது. இருந்தாலும் துனிந்து இதை நிறுவினேன். அவர்கள் கூறியது போலவே, இப்பொழுது என்னுடைய "Contacts" மற்றும் "Messaging" அப்ளிகேஷனின் வேகம் மிகையாகவே உள்ளது.

2 comments:

Subash said...

P1 is a best phone. i used this. and u can get more applications frm net.
and its easy to sync with pc, not like other SE mobiles. ( cos of symbion ? )

ரவி said...

வேற எதாவது பொதுவா எழுதுங்களேன்...

தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் உங்களுக்கு பிடிச்சது பிடிக்காதது, சமூகம் பொருளாதாரம் அரசியல், சினிமா என்று ஏதாவது இண்ட்ரஸ்டிங்கா எழுதுங்களேன்...

சுத்த போர் !!!