Tuesday, October 07, 2008

செயலிழக்கும் செயற்கைக்கோள்கள் - குணமாக்கும் ரோபோக்கள்

நம்முடைய பூமிப்பந்தைச் சுற்றி தற்பொழுது எத்தனை செயற்கைக்கோள்கள் சுற்றிக் கொண்டிருக்கும் என்று உங்களால் கணிக்க முடிகிறதா? இதன் எண்ணிக்கை 8000ஐத் தாண்டும் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள். இதில் செயலிழந்த செயற்கைக் கோள்களும் அடங்கும். செயலிழக்கும் செயற்கைக்கோள்கள் விண்வெளியிலேயே விடப்படும். இதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? கீழே உள்ள புகைப்படத்தைப் பார்க்கவும்.


இந்த செயற்கைக்கோள்கள் வெவ்வேறு தேவைகளுக்காக பல நாடுகள் விண்ணில் நிறுத்தியவை. அதனால் இதன் கட்டமைப்புகள் முற்றிலும் மாறுபட்டு இருக்கலாம். இப்பொழுது, கனடாவிலுள்ள Queen's university ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அதாவது, செயலிழந்த செயற்கைக்கோள்களை Autonomous Space Servicing Vehicle (ASSV) என்று கூறப்படும் ரோபோ தேடிக்கண்டுபிடித்து, அதைப் பிடித்து இழுத்து வந்து, இதற்காகவே விண்ணில் உருவாக்கப்படும் ஒரு பழுது பார்க்கும் நிலையத்தில் கொண்டு நிறுத்தும். அதன் பின்னர், பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் பழுது பார்க்கப் படுமாம்.

தற்பொழுது அவர்கள் செயலிழந்த செயற்கைக்கோள்களை கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். கேட்பதற்கு இந்த ஆராய்ச்சி நன்றாக இருந்தாலும், இதில் பல சிக்கல்கள் உள்ளது. சரியாக ஒரு செயற்கைக்கோளை பிடித்து இழுத்து வருவது, செயற்கைக் கோள்களின் கட்டமைப்பின் படி அதை சரி செய்வது, இதெல்லாம் சாத்தியமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு: http://rcvlab.ece.queensu.ca/~greensm/papers/TaatiIROS05.pdf

Saturday, October 04, 2008

மதுரை "கோ கார்ட்" பிரியர்களுக்கு ஒரு நல்ல சேதி

ஆமாண்ணே!!!

சென்னையில அடிக்கடி "Go Cart" ஓட்டி பழக்கமாயிடுச்சி. விடுமுறைக்காக இப்போ 5 நாள் மதுரையில இருக்கும் போது, என்னோட நண்பர் மதுரையிலயும் "கோ கார்ட்" இருப்பதாக சொன்னார். என்னடா இது? புதுசா இருக்கேன்னு கிளம்பி போனேன். சும்மா சொல்லக்கூடாது. நல்லாத்தான்யா இருக்கு. ட்ராக் நல்லா வளைஞ்சி வளைஞ்சி போறதுனால நல்லாவே இருக்கு. எங்க இருக்குன்னு கேக்குறீகளா. ரிங் ரோட்ல இருந்து சிவகங்கை சாலையில திரும்புனவுடனே வலது கை பக்கமா இருக்குங்க. அஞ்சு நிமிடத்துக்கு ரூ.75/- வசூலிக்கிறாங்க. ஊருக்கு வந்தீயன்னா முயற்சி பண்ணி பாருங்க.


அப்படியே, மதுர காரவுக யாராவது இத படிச்சீகன்னா, மதுரையில "Bowling alley" எங்கயாவது இருந்ததுன்னா தெரியப்படுத்துங்க.

Friday, October 03, 2008

நோகியா 5800 - ஐ - ஃபோன் கில்லர்

ஆப்பிள் நிறுவனம் ஐஃபோனை வெளியிட்டதுல இருந்து, ஆளாளுக்கு போட்டி போட்டுகிட்டு "ஐஃபோன் கில்லர்"னு புதுசு புதுசா கிளப்பிவிட்றானுக. போன வாரம் தான் கூகிள் நிறுவனமும், டி-மொபைலும் சேர்ந்து ஒரு ஃபோன வெளியிட்டாங்க. இப்போ புதுசா நோகியாவும் கிளம்பிடுச்சு. அனேகமா, நோகியாவோட முதல் டச் ஸ்கிரீன் மொபைலுன்னு நினைக்கிறேன். இதோ, கீழே இந்த புதூ மொபைலோட படங்கள பாருங்க. இந்த வருட கடைசில இந்த மொபைல் இந்தியாவுக்கு வந்திடும்னு எதிர்பார்க்கலாம்.

இதோட மற்ற விபரங்கள்:
  • 3.2" தொடு-திரை.
  • இதன் எடை சற்று கம்மியே, 109 கிராம்.
  • மூன்று நிறங்களில் வருகிறது, கருப்பு, சிகப்பு, நீலம்.
  • 8gb microSD கார்டுடன் வருகிறது. (max: 16gb)
  • 3.2 மெகா பிக்ஸல் காமிரா. (30 fps வரை படங்களை பதிவு செய்யலாம்)
  • Wi-Fi, Bluetooth, GPS.
  • Standard 3.5 mm ஹெட்-ஃபோன் ஜாக்.
  • 3G சப்போர்ட்.
  • விலை $340.
ஆனால், இதில் ஒரு பெரிய குறையாக காணப்படுவது, வெளி அப்ளிகேஷன்களை நிறுவ முடியாதாம்.


காதலில் விழுந்தேன் - "உனக்கென நான்" ஒரு டப்பிங் பாடல்

"காதலில் விழுந்தேன்" பாடல்கள் நன்றாகவே ஹிட் ஆகிவிட்டது. இதில் இடம் பெற்றுள்ள "உனக்கென நான்" பாடல் அப்படியே "ரிஹானா"வின் "Unfaithful" பாடலில் இருந்து காப்பி அடிக்கப் பட்டுள்ளது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், டப்பிங் செய்யப் பட்டுள்ளது. நீங்களே கேட்டுப் பாருங்கள்.

Thursday, October 02, 2008

பார்க்க வேண்டிய படங்கள்

நான் அவ்வளவாக ஆங்கில படங்கள் பார்ப்பது கிடையாது. என்னுடைய நண்பன், தான் பார்த்து இரசித்த படங்களை USB ஹார்ட் டிஸ்கில் 60gbக்கு வைத்திருந்தான். அவனிடம் இருந்து வாங்கி வந்து time-table போட்டு படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அதில் நான் மிகவும் இரசித்த படங்களின் பெயர்களை கீழே கொடுத்துள்ளேன். நீங்களும் பார்த்து இரசியுங்கள். டாரண்ட் வெப்சைட்டுகளில் தேடுனீர்களென்றால் இந்த படங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

அனைத்தும் ஆங்கில படங்கள் என்பதால், ஆங்கிலத்திலேயே எழுதுகின்றேன்.
  • In silence of lambs (Thriller)
  • Shooter (Action)
  • Toy Story (Animation)
  • Toy Story 2 (Animation)
  • Enemy at the gates (Action)
  • In pursuit of Happiness (Classical)
  • American Beauty
  • How to loose a guy in 10 days (Comedy)
  • V for Vendetta (Action)
  • Forest Gump

Wednesday, October 01, 2008

ஃபேஸ் புக் அப்ளிகேஷன்கள்

ஃபேஸ் புக் ஒரு வகையான "Social Networking site". இதன் இந்திய பயனாளர்கள், ஆர்குட்டை விட சற்று கம்மியாக இருந்தாலும், இதன் சிறப்பம்சமே இதன் அப்ளிகேஷன்கள் தான். இதிலுள்ள சில அப்ளிகேஷன்கள் ஒருவிதமான மயக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. இந்த பதிப்பில் நான் ஃபேஸ்புக்கில் பயன்படுத்தும் சில அப்ளிகேஷனைப் பற்றி எழுதுகின்றேன்.

1. KnightHood

இதுவே நான் பயன்படுத்திய முதல் அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷனை ஃபேஸ்புக்கில் நீங்கள் நிறுவிய பிறகு, நீங்கள் ஒரு போர் வீரன். ஆமாம்!!! உங்களுக்கென்று ஒரு ஊர் ஒதுக்கப் படும். தொடங்கும் பொழுது, உங்களுக்காக மூன்று கட்டடங்கள் இருக்கும், Court, Castle, Market. முத்லில், இந்த மூன்று கட்டடங்களில் உங்களது ஃபேஸ்புக் நண்பர்களை assign செய்ய வேண்டும். பிறகு, Castle மூலம் பல கட்டடங்களை கட்ட வேண்டும் (Watchtowers, Wall, Palisade, Hospital, Church, Tower, Outpost, etc).

Watchtower, Wall, Palisade - இந்த மூன்றும் உங்களது இராஜாங்கத்தின் 'defense' கட்டடங்கள். எதிரிகள் உங்களை தாக்கும் பொழுது, இந்த மூன்று கட்டடங்களையே தாக்குவார்கள். இதிலும் நீங்கள் உங்கள் ஃபேஸ்புக் நண்பர்களை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு நண்பர்களுக்கும் அவர்களது பலத்தை பொறுத்தே எதிரிகளை தாக்குவார்கள். உங்களது பலம் எதிரிகளின் பலத்தை விட அதிகமாக இருந்தால், நீங்கள் வெல்வீர்கள். அல்லது அவர்கள் உங்களது இராஜ்யத்தில் நுழைந்து உங்கள் நண்பர்களையோ அல்லது தங்கங்களையோ பறித்து விடுவார்கள்.

இதைப் போல நீங்களும் பிறர் இராஜ்யத்தைத் தாக்கி தங்கங்களையும், வேலையாட்களையும் பறித்து வரலாம். விளையாண்டு பாருங்க, நல்லா டைம் பாஸ் ஆகும்.

2. Mouse Hunt

இது ஒரு சிறு பிள்ளைத்தனமான விளையாட்டு. என்னவென்றால், நீங்கள் எலி பிடிக்க வேண்டும் (உண்மையாக அல்ல, விளையாட்டில்!!!). முதலில், ஒரு நல்ல எலிப்பொறி வாங்க வேண்டும். பிறகு எலிக்கு மிகவும் பிடித்த Cheese வாங்க வேண்டும். வாங்கிய cheeseஐ பொறியில் நிறப்பி விட்டு காத்திருக்க வேண்டும். அவ்வளவு தான். எலி தானாக மாட்டும். ஒவ்வொரு எலி மாட்டும் பொழுதும், உங்களது Points மற்றும் Gold அதிகமாகிக் கொண்டே வரும். இதைப் பொறுத்து நீங்கள் வேறு அதிக பலம் கொண்ட பொறி வாங்க வேண்டும். இந்த விளையாட்டில் பலவிதமான எலிக்கள் உண்டு (Gold mouse, Steel mouse, Diamond mouse, Zombie mouse, Ninja mouse, etc). சில எலிகள் சற்று உஷாரான எலிக்கள். உங்களது பொறியில் மாட்டாமல், cheese மற்றும் goldஐ சுட்டுட்டு போயிடும்.

3. Speed Racer

இது ஒரு கார் பந்தயப் போட்டி. உங்கள் நண்பர்களையும் இந்த அப்ளிகேஷனை நிறுவச் சொல்லுங்கள். ஒரு காரை வாங்குங்கள். இதை வைத்து உங்கள் நண்பர்களுடன் போட்டி போடுங்கள். சில நேரம் அவர்கள் வெல்வார்கள், சில நேரம் நீங்கள் வெல்வீர்கள். நீங்கள் வென்றால், உங்களுக்கு points கூடும். அதை வைத்து வேறு ஒரு புதிய வேகமான காரை (more mph) வாங்க வேண்டும். அவ்வளவு தான். உங்களது காரின் பவர் அதிகமாக இருந்தால், நீங்கள் வெல்வதற்கு வாய்ப்பு அதிகமாகும்.

4. Motorcycle Madness

இதுவும் Speed Racer போலத்தான். ஒரே வித்தியாசம், இதில் காருக்கு பதிலாக மோட்டார் சைக்கிள்.

இதைத் தவிர தங்களுக்கு ஏதாவது ஒரு நல்ல ஃபேஸ்புக் அப்ளிகேஷன் இருந்தா என்ட சொல்லுங்க!!!

P1i ஹாக்ஸ் - 1

சென்ற பதிவில் P1i செல்பேசி வாங்கியதாக எழுதியிருந்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த செல்பேசி என்னிடம் நல்ல பெயரே வாங்கியுள்ளது. Symbian இயக்கி microkernel என்பதால், இதன் வேகம் சற்று குறைவாகவே இருக்கும் என்று எண்ணினேன். இதில் இருக்கும் ஒவ்வொரு சேவையும் ஒவ்வொரு அப்ளிகேஷனாகவே அமைக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் ஒரு SMS அனுப்பவேண்டும் என்றால், ஒரு அப்ளிகேஷன் இயங்க வேண்டும். நீங்கள் SMS அனுப்பியவுடன் அந்த அப்ளிகேஷன் மெமரியிலேயே இருக்கும். இவ்வாறு நீங்கள் இயக்கிய ஒவ்வொரு அப்ளிகேஷனும் மெமரியிலேயே இருக்கும். காரணம், "Symbian supports multi-tasking". பல அப்ளிகேஷன் இயங்கும் பொழுதும் இதன் வேகம் குறைவதாக தெரியவே இல்லை. இதற்கு சான்றாக இந்த வீடியோவை பார்க்கவும்.



எனினும், "Contacts" மற்றும் "Messaging" அப்ளிகேஷனின் வேகம் சற்று குறைவாகவே உள்ளதாக எண்ணினேன். இணையத்தில் தேடிப் பார்த்ததில், இதற்கு ஏற்கனவே தீர்வு இருப்பதை அறிந்தேன், http://www.uiqblog.com/2008/05/09/speed-boost-for-your-uiq3-phone/ இந்த ஹாக்கை என்னுடைய புதிய செல்பேசியில் நிறுவுவதற்கு சற்று தயக்கமாகவே இருந்தது. இருந்தாலும் துனிந்து இதை நிறுவினேன். அவர்கள் கூறியது போலவே, இப்பொழுது என்னுடைய "Contacts" மற்றும் "Messaging" அப்ளிகேஷனின் வேகம் மிகையாகவே உள்ளது.