Tuesday, August 29, 2006

இதுவல்லவோ நட்பு???

சமீபத்தில், எனது நன்பர் ஒருவரிடம் உரையாற்றிக்கொண்டிருந்த பொழுது, அவர் படித்த ஒரு ஆங்கில கதை பற்றி என்னிடம் கூறினார். அது எனது மனதை வெகுவாக பாதித்து விட்டது. படித்துப் பாருங்கள். உங்களைக் கூட அந்த கதை பாதிக்கலாம்.

இரண்டு நன்பர்கள் போர்க்களத்தில் ஒன்றாக சென்று போர் புரிகின்றனர். இருவரும், ஒருவரை விட்டு ஒருவர் போருக்குச் செல்ல மாட்டார்கள். ஏனென்றால், போர்க்களத்தில் ஒருவர் மடிந்து ஒருவர் உயிர் வாழ்வதை இருவரும் விரும்பவில்லை.

ஓர் நாள், அந்த இரண்டு நன்பர்களில் ஒருவனுக்கு, போர்க்களத்தில் காயம் பட்டது. காயம் சிறிது என்றாலும், அவனால் மருநாள் போர்க்களத்திற்கு செல்லமுடியவில்லை. தனது அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவனை அவனது நன்பன் சந்தித்து, "நான் சென்று வருகிறேன். உன்னால் இன்று போர்க்கள‌த்திற்கு வர முடியாது. ஆதலால், நீ ஓய்வெடுத்துக் கொள். மாலை உன்னை சீக்கிரமாக வந்து சந்திப்பேன்" என்று கூறிவிட்டுச் சென்றான்.

போர்க்களத்தில், எதிர்பாராத விதமாக இவன் சென்ற குழுவை எதிரிகள் சூழ்ந்து கொண்டார்கள். என்ன செய்வதென்று தடுமாறிய போது, இவர்கள் மீது எதிரிகள் குண்டுகளை மழையாக பொழிந்தார்கள். குண்டடி பட்டு நமது நன்பன் கீழே விழுந்தான். ஆயினும், உயிர் அப்பொழுதே பிரியவில்லை.

இந்த தகவலை அறிந்த அவனது நன்பன், "நான் சென்று என் நன்பனைப் பார்க்க வேண்டும். அவன் என‌க்காக உயிரைப் பிடித்து காத்துக்கொண்டிருப்பான்." என்று கூறினான். அதற்கு அவனது மேலதிகாரிகள் மறுத்துவிட்டனர். "நீ காயம் பட்டுள்ளாய். போர்க்களம் சென்றால் நீயும் உயிர் விட வேண்டியது தான்" என்றனர்.

அவர்கள் பேச்சை பொருட்படுத்தாமல், தனது காயங்களை மதிக்காமல், அவன் போர்க்களம் சென்றான். போர்களத்தில், காயம் பட்டு சுயநினைவை இழந்திருந்த தனது நன்பனை மடியில் ஏந்திக் கொண்டு கன்னீர் விட்டு கதறி அழுதான்.

அப்பொழுது, பூ மலர்வதைப் போல் தனது கண்களைத் திறந்து அவன் நன்பன், "வந்துவிட்டாயா? நான் உனக்காகத் தான் காத்திருந்தேன். நீ... நீ வருவாய்... என்று நான் அறிவேன்." என்று கூறியதும், வாடிய பூ போல் தனது உயிரை நன்பன் மடி மீதே விட்டான்.


இதைக் கேட்டதும், அவன‌து நன்பன் அவனை இறுக கட்டிக் கொண்டு, வானத்துக்கும் பூமிக்கும் சேர்த்து அழுதான். எதிர் பாராதவிதமாக, அவன் பின்னால் இருந்து பாய்ந்து வந்த குண்டு, அவன் உயிரயும் சேர்த்து கொண்டு சென்றது.

ஏற்கெனவே, குண்டடி பட்டிருந்த இவனை அந்த குண்டு வெகு நேரம் விட்டு வைக்கவில்லை. அவன் விட்டது தனது உயிரையென்றாலும், தனது நன்பனை விட்டு விடவில்லை. அவனை இறுக கட்டிக் கொண்டே மண்ணில் விழுந்தான்.

அன்று இற‌ந்தது இரு உயிர்கள் என்றாலும், அவர்கள் போற்றி வந்த நட்பு அல்ல.

No comments: