Thursday, May 28, 2009

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த எல்லை பாதுகாப்பு படைக்கான பாடல்

ஏ.ஆர்.ரகுமான் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையிரனுக்காக ஒரு பாடலை இசையமைத்துள்ளார். பாடல் படமாக்கப் பட்ட விதம் உண்மையான சண்டைக் காட்சிகளைப் போலவே அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக தீவிரவாதிகளிடம் சண்டையிடுவதாகவே அமைந்துள்ளது.

இருந்தாலும், இந்த பாடலில் அவர் ஏற்கனவே இசையமைத்த "போஸ் - தி ஃபர்காட்டன் ஹீரோ" என்ற இந்தித் திரைப்படப் பாடலின் இசையையே உபயோகித்துள்ளார். கீழே, முதலில் போஸ் படப் பாடலையும், அதன் கீழே எல்லை பாதுகாப்புப் படையினரின் பாடலையும் காணலாம்.

போஸ் படத்தின் பாடலை ஏ.ஆர்.ரகுமானே பாடியது போல், அவரே இந்தப் பாடலையும் பாடியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.



Friday, May 22, 2009

பிரபாகரன் அவர்கள் பிபிசிக்கு அளித்த செவ்விகள்

பிரபாகரன் இறந்தாரா உயிருடன் இருக்கிறாரா என்று மக்கள் குழம்பிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், பிரபாகரன் 1987, 1991, 1994, 1995 ஆண்டுகளில் பிபிசிக்கு அளித்த செவ்விகளை இங்கு கேட்கலாம். (http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/05/090518_prabaiw.shtml)

இதில், அவர் இறுதி மாவீரர் நாளில் அளித்த செவ்வியையும் கேட்கலாம்.

Wednesday, May 06, 2009

உதகமண்டலம் ஏரியின் தற்போதைய நிலை...

சென்னையின் கொடூர வெயிலில் இருந்து தப்பி உதகமண்டலம் சென்று சற்று இளைப்பாறிவிட்டு வரலாம் என்று என் நண்பர்களுடன் சென்றிருந்தேன். அறைக்குச் சென்று குளித்துவிட்டு உதகை ஏரிக்குச் செல்லலாம் என்று கிளம்பினோம். என் நண்பர்கள் படகு சவாரி செய்ய ஆசைப்பட்டார்கள். எனக்கு ஏனோ படகு சவாரி செய்ய வேண்டும் என்று தோனவில்லை. அவர்களை வழியனுப்பி விட்டு நானும் எனது மற்றொரு நண்பனும் அவர்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம்.

அப்பொழுதுதான் ஏரியை நன்கு கவனித்தேன். கரையோரம் இரண்டு மீண்கள் இறந்துகிடந்தன. அருகிலிருந்த படகோட்டியிடம் கேட்ட பொழுதுதான் தெரிந்தது, ஊட்டி ஏரியிலும் பாழாய்போனவர்கள் கழிவுநீரை கலந்துவிட்டனர்.


ஒன்றும் சொல்வதற்கில்லை!!! நீங்களும் ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய நெர்ந்ததெனில், கையை ஏரியில் விட்டு விடாதீர்கள். நிறைய பேர் இதை அறியாமல் ஏரியின் நீரில் கையை வைத்து விளையாடுகிறார்கள்.