Monday, December 31, 2007

சாய் பாபா அவர்களின் சித்து விளையாட்டுக்கள்!!!

கீழே கொடுக்கப்பட்டுள்ள‌ காட்சிகளை பார்வையிடவும். சாய் பாபாவை கடவுளாக தரிசிக்கும் அன்பர்கள் பார்வைக்கு!!!

பின்குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள காட்சிகளுக்கு யாம் பொறுப்பல்ல.












Friday, December 28, 2007

உயிரெழுத்து!!!

நான் மெய்யெழுத்து, நீ என் உயிரெழுத்து
நம் மெய் பொய்யாகி, உயிர் மெய்யாகி,
நாம் உயிர்மெய் எழுத்தாவது எப்பொழுது???

Thursday, December 20, 2007

காட்டு வாழ்க்கை

காட்டிற்குள் செல்வது இதுவே எனக்கு முதல் அனுபவம். காட்டு வாழ்கை நாட்டில் கிடைக்காது என்றாலும், காட்டிற்குச் செல்லும் முன் நம்மை தயார் படுத்திச் செல்ல வேண்டும். அதுவும், ஓர் இரவு அங்கு தங்குவதென்றால் சாப்பிடுவதற்குத் தேவையான வற்றையும் தூக்கிச் செல்ல வேண்டும்.

பாம்புகள், யானைகள், காட்டு எருமைகள் ஆகிய விலங்குகளை நேருக்கு நேர் சந்திக்க நேரிடும் என்றே மணதை தைரியப்படுத்தி வைத்திருந்தேன். ஆனால், ஏமாற்றம் தான் மிச்சம். நான் என்னிய அளவிற்கு பயமாக இல்லை. எனினும், அட்டை பூச்சிகளால் சிர‌மம் ஏற்பட்டது. என்னுடன் வந்த சிலரை அட்டைப் பூச்சி விட்டுவைக்கவில்லை. அவர்களின் இரத்தத்தை சுவை பார்த்து விட்டது. இலைகள் மேல் நின்று நடனமாடிக் கொண்டிருக்கிறது. நாம் நடந்து செல்லும் பொழுது காலணியில் ஏறிக் கொண்டு, விரைவாக கால்களில் ஏறி இரத்தத்தை உறிந்து விடுகிறது. இதைப் பற்றி கூடுதல் தகவல் அறிய
http://en.wikipedia.org/wiki/Leech சொடுக்கவும்.

சரி, விசயத்திற்கு வருவோம். சென்னை ந(ர)க(ர) வாழ்கையை விட்டு யாரும் மிகுதியாக இல்லாத ஒரு மலைக்குச் சென்று ஒரு இரவு தங்கிவிட்டுத் திரும்பலாம் என்று யோசிக்கும் பொழுது, கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டைத் தேர்ந்தெடுத்தோம். கோழிக்கோடிலிருந்து பிரிந்து ஒரு தனி நகர அந்தஸ்து பெற்றது 1980ல். இது மேற்குத் தொடற்சி மலையில் உள்ள ஒரு நகரமாகும்.

வெள்ளி மதியமே அலுவலகத்திலிருந்து விடுப்பெடுத்து, சென்னையிலிருந்து கோழிகோடு செல்லும் இரயிலில் எங்கள் பயண‌த்தை தொடங்கினோம். அதிகாலை 5 ம‌ணிக்கு கோழிகோட்டில் இற‌ங்கி கல்ப்பேட்டா செல்லும் பேருந்தில் ஏறினோம். 2 மணிநேர‌ பிரயாண‌த்திற்குப் பிறகு, மேப்பாடி என்னும் இடத்திற்கு மற்றொரு பேருந்தில் ஏறி காட்டுப் பயண‌ம் தொடங்கும் இடத்தை 11 மணிக்குச் சென்றடைந்தோம்.

அடிக்கடி எங்களைப் போல் சிலர் இங்கு வந்து செல்வதால் பாதை சரியாகவே அமைந்திருந்தது. சில இடங்களில் மட்டும், சற்று சிர‌மப்பட்டு செல்ல வேண்டியிருந்தது. ஆங்காங்கே மரங்கள் உடைந்து பாதையை மறைத்துக் கொண்டு கிடந்தன. 2 மணி நேர கடிண நடைக்குப் பின்னர், உணவு உண்ண ஒரு இடத்தைச் சென்றடைந்தோம். மலைகளின் நடுவே அமர்ந்து நாங்கள் கொண்டு வந்திருந்த உணவை அருந்தினோம். அங்கிருந்து சுற்றி மரங்களாக அமைந்தது, மணதிற்கு அமைதியைத் தந்தது.


பிறகு, 3 மணி நேர கடின நடைக்குப் பின்னர் சரியாக 5:30 மணிக்கு மலை உச்சியை அடைந்தோம். இது வெள்ளரி மலை என்று அழைக்கப் படுகிறது. 6 மணிக்கெல்லாம் குளிர ஆரம்பித்துவிட்டது.

எங்களுடன் வந்த வழிகாட்டுனர்கள், விறகுகளை சேகரித்து பின் தீ மூட்டினர். நன்றாக குளிர் காய்ந்து, கூடாரங்கள் அமைத்து கண்ணுறங்கி, பின் காலை எழுந்து கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். 4 மணி நேர கடிண நடைக்குப் பின், ஆரம்பித்த இடத்தை வந்தடைந்தோம்.

இப்பொழுது, காட்டு வழி பயணத்தை நினைத்துப் பார்த்தால், கனவு போல் உள்ளது. இங்கு சிறை பிடித்த சில வண்ணப் படங்களை பார்வையிட கீழே கொடுக்கப் பட்ட சுட்டியை சொடுக்கவும்.


VellariMala Trek - Dec '07

Friday, December 07, 2007

வெடிப்பு நிகழும் !!!

அமுக்கு, அமுக்கு
இன்னும் சற்றே அதிகம் அமுக்கு
அழுத்தம் அதிகரிக்கும்!
வெடிப்பு நிகழும்!

சுடு சுடு
நூறுபேர் விழட்டும்
துப்பாக்கியைச் சுழற்றிச் சுடு
ஆயிரக் கணக்கில் அவர்கள் விழட்டும்
பிறகு தான்
லெட்சம் லெட்சமாய் அணிகள் திரளும்
துப்பாக்கிகள் நொருங்கிச் சிதறும்.

மயிலாசனத்தின் அரசியல் அநாதையை
நீ அறியாயா?
நீங்கள் குருடர்
பிறவிக் குருடர்
வரலாறு உமக்குத் தெரிவதே இல்லை.

1980ல், எம்.ஏ.நுஃமான் இலங்கை ராணுவத்தைப் பார்த்து எழுதியது!!!

Thursday, January 11, 2007

மறுபக்கம்

ஏம்பா உன்னோட பையனுக்கு வேல கிடச்சிருச்சா?

ஆமாம்பா. இப்போ தான் கஷ்டப்பட்டு ஏதோ ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனில வேலைக்கு சேந்தான். நல்ல சம்பளம் குடுக்குறாங்க. ஆமாம், உன்னோட பையன் என்ன ஆனான்?

என்னோட பையனும் ஸாஃப்ட்வேர் கம்பெனில தாம்பா வேல பாக்குறான். இப்போ அவனுக்கு ப்ரொமோஷன்லாம் குடுத்தாங்க.

அப்படியா?

"ஆமாம். ஃப்லோர் க்ளீனரா இருந்து, இப்போ ஆபீஸ் பாயா ஆயிட்டான்ல!", தன் மகனைப் பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டார்.