Wednesday, March 07, 2012

கோனி 2012

சிறிது நாட்களுக்கு முன் கொலைவெறி பாடல் youtube தளத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோ. அது யாருக்கும் எந்த உபயோகத்தையும் தரவில்லை. தற்பொழுது youtube தளத்தில் அதிகமாக பார்க்கப்படும் வீடியோ "KONY 2012". ஆனால், இதன் நோக்கம் மிகவும் ஆழமானது.

ஜோசப் கோனி என்பவன் உகாண்டா நாட்டில் ஒரு கொள்ளை கும்பல் தலைவன். உகாண்டா நாட்டில் சிறு குழந்தைகளை கடத்தி அவர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்து, அவனுடைய போர்படையில் சேர்த்துக்கொள்கிறான். போர் என்றதுமே ஏதோ நல்ல காரணத்திற்காக செய்கிறான் என்றில்லை. மேலும் பணங்களை சேர்த்துகொள்வதே இவன் நோக்கம். 

இவனுடைய அயோக்கிய தனத்தை உலகுக்கு தெரியபடுதுவதே "கோனி 2012" என்பதன் நோக்கம். அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் உகாண்டா நாட்டிற்கு செல்லும் பொழுது கோனியின் போர்படையில் இருக்கும் ஒரு சிறுவனை சந்தித்திருக்கிறார். அவன் மூலம் அந்த குழந்தைகளின் கஷ்டங்களை அறிந்து கொண்டு இந்த வீடியோவை உருவாக்கிருக்கிறார். "கோனி"ஐ உலக அளவில் பிரபலம் ஆக்கி அதன் மூலம் அவனை கைது செய்ய வைப்பதே இதன் நோக்கம்.


நாம் எப்பொழுது மகிந்த ராஜபக்ஷவை பிரபலமாக்க போகிறோம்?

Friday, February 24, 2012

மடிக்கணினித் திரை பழுதாகி விட்டதா?

உங்கள் மடிக்கணினித் திரை பழுதாகி விட்டால் அதை மாற்ற நீங்கள் அதிக அளவில் பணத்தைச் செலவு செய்ய வேண்டும். இந்த நிலை நீங்கள் மடிக்கணினி வாங்கி கண்டிப்பாக 4 அல்லது 5 வருடங்களில் நடக்கும். நீங்கள் அதிக பணம் செலவு செய்து புது திரை மாற்றினால் கூட அடுத்த 5 ஆண்டுகளில் பழுதாகிவிடும்.

என்னுடைய மடிக்கணினி திரை பழுதடைந்து விட்டது. அதை மாற்ற நினைத்த பொழுது 11,000 ருபாய் கேட்டார்கள். நான் அதற்கு பதிலாக 6000 ரூபாய்க்கு வெளித்திரை (LED Monitor) வாங்கி அதை மடிக்கணினியுடன் இணைத்து விட்டேன்.

ஆனால், இப்பொழுது என்னால் மடிக்கணினியுடன் இருக்கும் விசைப்பலகையை பயன் படுத்த முடியவில்லை. காரணம், மடிக்கணினியின் திரை வெளித்திரையை மறைக்கும். 

சிறிது நாள் USB விசைபலகையை இணைத்து உபயோகித்து வந்தேன். பழுதடைந்த மடிக்கணினியின் திரையை அகற்றினால், அதில் உள்ள விசைபலகையையே பயன் படுத்திடலாம் என்று அதை அகற்றி விட்டேன். 



இப்பொழுது என்னுடைய மடிக்கணினி பார்ப்பதற்கு All-in-one PC போன்று உள்ளது.  மடிக்கணினியை வெளியில் எங்கும் எடுத்துச் செல்லாததால், எனக்கு ஒன்றும் குறையாகத் தெரியவில்லை.

Monday, December 12, 2011

சந்திர கிரகணம் - படங்கள்

சந்திர கிரகணம் கடந்த டிசம்பர் 10 தேதி இந்தியாவில் முழுவதுமாக காணமுடிந்தது. பூமியின் நிழல் நிலவில் விழுவதால், இந்த கிரகணம் ஏற்படுகிறது. பொதுவாக, சந்திர கிரகணம் சில மணி நேரங்கள் நீடிக்கும். இதைப்  பொதுவாக உலகின் அணைத்து இடங்களில் இருந்தும் காண முடியும் (அந்த அந்த இடங்களில் இரவில் ஏற்பட்டால்). சூரியக் கிரகணங்களைப் போல் அல்லாமல், சந்திர கிரகணங்களை நாம் எவ்வித கண்ணாடிகளை அணியாமல் நேராகப் பார்க்கலாம்.

ஒரு வருடத்திற்கு இரு சந்திர கிரகணங்கள் ஏற்படுவதாக அறியப்படுகிறது. ஆனால், நாம் சமீபத்தில் பார்த்த முழு கிரகணம் போல் அமைவதற்கான வாய்ப்பு சற்று குறைவு தான். கிரகணங்கள் ஏற்படுவதை Saros என்னும் கால அளவைக் கொண்டு அறிகிறார்கள்.

அடுத்த முழு சந்திர கிரகணம் 15, ஏப்ரல் 2014 ஆம் வருடம் காண முடியும்.

கீழே கொடுக்கப் பட்டுள்ள சந்திர கிரகணப் படங்கள் நான் சென்னையில் இருந்து எடுத்தது, முழு கிரகணம் முடிந்த பின்னரே என்னால் படம் எடுக்க முடிந்தது,


Thursday, November 10, 2011

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்

தாராசுரம் என்றொரு ஊர். கும்பகோணத்திலிருந்து 3 கிமீ தூரத்தில் உள்ளது. இங்குள்ள‌ புகழ் பெற்ற ஐராவதேஸ்வரர் கோவில், 12ம் நூற்றாண்டில் இரண்டாம் இராசஇராச சோழனால் கட்டப்பெற்றது. மிகவும் அழகான சிற்பங்களைக் கொண்டது. 'யுனெஸ்கோ'வால் அங்கீகரிக்கப் பெற்று 'இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழக'த்தால் பராமரிக்கப் பெற்று வருகிறது. சோழர்கள் கட்டிய முப்பெரும் கோயில்களில் இதுவும் ஒன்று. மற்றவை தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகும்.

இங்கு வடிவமைக்கப் பட்டுள்ள பல சிற்பங்கள், அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் நிலையை விளக்குகிறது. 

கீழே உள்ள படங்களைக் காணவும்.

Darasuram Slideshow: Alexander’s trip to Kumbakonam, Tamil Nadu, India was created by TripAdvisor. See another Kumbakonam slideshow. Take your travel photos and make a slideshow for free.