Friday, February 24, 2012

மடிக்கணினித் திரை பழுதாகி விட்டதா?

உங்கள் மடிக்கணினித் திரை பழுதாகி விட்டால் அதை மாற்ற நீங்கள் அதிக அளவில் பணத்தைச் செலவு செய்ய வேண்டும். இந்த நிலை நீங்கள் மடிக்கணினி வாங்கி கண்டிப்பாக 4 அல்லது 5 வருடங்களில் நடக்கும். நீங்கள் அதிக பணம் செலவு செய்து புது திரை மாற்றினால் கூட அடுத்த 5 ஆண்டுகளில் பழுதாகிவிடும்.

என்னுடைய மடிக்கணினி திரை பழுதடைந்து விட்டது. அதை மாற்ற நினைத்த பொழுது 11,000 ருபாய் கேட்டார்கள். நான் அதற்கு பதிலாக 6000 ரூபாய்க்கு வெளித்திரை (LED Monitor) வாங்கி அதை மடிக்கணினியுடன் இணைத்து விட்டேன்.

ஆனால், இப்பொழுது என்னால் மடிக்கணினியுடன் இருக்கும் விசைப்பலகையை பயன் படுத்த முடியவில்லை. காரணம், மடிக்கணினியின் திரை வெளித்திரையை மறைக்கும். 

சிறிது நாள் USB விசைபலகையை இணைத்து உபயோகித்து வந்தேன். பழுதடைந்த மடிக்கணினியின் திரையை அகற்றினால், அதில் உள்ள விசைபலகையையே பயன் படுத்திடலாம் என்று அதை அகற்றி விட்டேன். 



இப்பொழுது என்னுடைய மடிக்கணினி பார்ப்பதற்கு All-in-one PC போன்று உள்ளது.  மடிக்கணினியை வெளியில் எங்கும் எடுத்துச் செல்லாததால், எனக்கு ஒன்றும் குறையாகத் தெரியவில்லை.