Wednesday, March 07, 2012

கோனி 2012

சிறிது நாட்களுக்கு முன் கொலைவெறி பாடல் youtube தளத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோ. அது யாருக்கும் எந்த உபயோகத்தையும் தரவில்லை. தற்பொழுது youtube தளத்தில் அதிகமாக பார்க்கப்படும் வீடியோ "KONY 2012". ஆனால், இதன் நோக்கம் மிகவும் ஆழமானது.

ஜோசப் கோனி என்பவன் உகாண்டா நாட்டில் ஒரு கொள்ளை கும்பல் தலைவன். உகாண்டா நாட்டில் சிறு குழந்தைகளை கடத்தி அவர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்து, அவனுடைய போர்படையில் சேர்த்துக்கொள்கிறான். போர் என்றதுமே ஏதோ நல்ல காரணத்திற்காக செய்கிறான் என்றில்லை. மேலும் பணங்களை சேர்த்துகொள்வதே இவன் நோக்கம். 

இவனுடைய அயோக்கிய தனத்தை உலகுக்கு தெரியபடுதுவதே "கோனி 2012" என்பதன் நோக்கம். அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் உகாண்டா நாட்டிற்கு செல்லும் பொழுது கோனியின் போர்படையில் இருக்கும் ஒரு சிறுவனை சந்தித்திருக்கிறார். அவன் மூலம் அந்த குழந்தைகளின் கஷ்டங்களை அறிந்து கொண்டு இந்த வீடியோவை உருவாக்கிருக்கிறார். "கோனி"ஐ உலக அளவில் பிரபலம் ஆக்கி அதன் மூலம் அவனை கைது செய்ய வைப்பதே இதன் நோக்கம்.


நாம் எப்பொழுது மகிந்த ராஜபக்ஷவை பிரபலமாக்க போகிறோம்?

Friday, February 24, 2012

மடிக்கணினித் திரை பழுதாகி விட்டதா?

உங்கள் மடிக்கணினித் திரை பழுதாகி விட்டால் அதை மாற்ற நீங்கள் அதிக அளவில் பணத்தைச் செலவு செய்ய வேண்டும். இந்த நிலை நீங்கள் மடிக்கணினி வாங்கி கண்டிப்பாக 4 அல்லது 5 வருடங்களில் நடக்கும். நீங்கள் அதிக பணம் செலவு செய்து புது திரை மாற்றினால் கூட அடுத்த 5 ஆண்டுகளில் பழுதாகிவிடும்.

என்னுடைய மடிக்கணினி திரை பழுதடைந்து விட்டது. அதை மாற்ற நினைத்த பொழுது 11,000 ருபாய் கேட்டார்கள். நான் அதற்கு பதிலாக 6000 ரூபாய்க்கு வெளித்திரை (LED Monitor) வாங்கி அதை மடிக்கணினியுடன் இணைத்து விட்டேன்.

ஆனால், இப்பொழுது என்னால் மடிக்கணினியுடன் இருக்கும் விசைப்பலகையை பயன் படுத்த முடியவில்லை. காரணம், மடிக்கணினியின் திரை வெளித்திரையை மறைக்கும். 

சிறிது நாள் USB விசைபலகையை இணைத்து உபயோகித்து வந்தேன். பழுதடைந்த மடிக்கணினியின் திரையை அகற்றினால், அதில் உள்ள விசைபலகையையே பயன் படுத்திடலாம் என்று அதை அகற்றி விட்டேன். 



இப்பொழுது என்னுடைய மடிக்கணினி பார்ப்பதற்கு All-in-one PC போன்று உள்ளது.  மடிக்கணினியை வெளியில் எங்கும் எடுத்துச் செல்லாததால், எனக்கு ஒன்றும் குறையாகத் தெரியவில்லை.