சந்திர கிரகணம் கடந்த டிசம்பர் 10 தேதி இந்தியாவில் முழுவதுமாக காணமுடிந்தது. பூமியின் நிழல் நிலவில் விழுவதால், இந்த கிரகணம் ஏற்படுகிறது. பொதுவாக, சந்திர கிரகணம் சில மணி நேரங்கள் நீடிக்கும். இதைப் பொதுவாக உலகின் அணைத்து இடங்களில் இருந்தும் காண முடியும் (அந்த அந்த இடங்களில் இரவில் ஏற்பட்டால்). சூரியக் கிரகணங்களைப் போல் அல்லாமல், சந்திர கிரகணங்களை நாம் எவ்வித கண்ணாடிகளை அணியாமல் நேராகப் பார்க்கலாம்.
ஒரு வருடத்திற்கு இரு சந்திர கிரகணங்கள் ஏற்படுவதாக அறியப்படுகிறது. ஆனால், நாம் சமீபத்தில் பார்த்த முழு கிரகணம் போல் அமைவதற்கான வாய்ப்பு சற்று குறைவு தான். கிரகணங்கள் ஏற்படுவதை Saros என்னும் கால அளவைக் கொண்டு அறிகிறார்கள்.
அடுத்த முழு சந்திர கிரகணம் 15, ஏப்ரல் 2014 ஆம் வருடம் காண முடியும்.
கீழே கொடுக்கப் பட்டுள்ள சந்திர கிரகணப் படங்கள் நான் சென்னையில் இருந்து எடுத்தது, முழு கிரகணம் முடிந்த பின்னரே என்னால் படம் எடுக்க முடிந்தது,