Tuesday, October 07, 2008

செயலிழக்கும் செயற்கைக்கோள்கள் - குணமாக்கும் ரோபோக்கள்

நம்முடைய பூமிப்பந்தைச் சுற்றி தற்பொழுது எத்தனை செயற்கைக்கோள்கள் சுற்றிக் கொண்டிருக்கும் என்று உங்களால் கணிக்க முடிகிறதா? இதன் எண்ணிக்கை 8000ஐத் தாண்டும் என்று பொறியாளர்கள் கூறுகிறார்கள். இதில் செயலிழந்த செயற்கைக் கோள்களும் அடங்கும். செயலிழக்கும் செயற்கைக்கோள்கள் விண்வெளியிலேயே விடப்படும். இதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? கீழே உள்ள புகைப்படத்தைப் பார்க்கவும்.


இந்த செயற்கைக்கோள்கள் வெவ்வேறு தேவைகளுக்காக பல நாடுகள் விண்ணில் நிறுத்தியவை. அதனால் இதன் கட்டமைப்புகள் முற்றிலும் மாறுபட்டு இருக்கலாம். இப்பொழுது, கனடாவிலுள்ள Queen's university ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அதாவது, செயலிழந்த செயற்கைக்கோள்களை Autonomous Space Servicing Vehicle (ASSV) என்று கூறப்படும் ரோபோ தேடிக்கண்டுபிடித்து, அதைப் பிடித்து இழுத்து வந்து, இதற்காகவே விண்ணில் உருவாக்கப்படும் ஒரு பழுது பார்க்கும் நிலையத்தில் கொண்டு நிறுத்தும். அதன் பின்னர், பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் பழுது பார்க்கப் படுமாம்.

தற்பொழுது அவர்கள் செயலிழந்த செயற்கைக்கோள்களை கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். கேட்பதற்கு இந்த ஆராய்ச்சி நன்றாக இருந்தாலும், இதில் பல சிக்கல்கள் உள்ளது. சரியாக ஒரு செயற்கைக்கோளை பிடித்து இழுத்து வருவது, செயற்கைக் கோள்களின் கட்டமைப்பின் படி அதை சரி செய்வது, இதெல்லாம் சாத்தியமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு: http://rcvlab.ece.queensu.ca/~greensm/papers/TaatiIROS05.pdf

Saturday, October 04, 2008

மதுரை "கோ கார்ட்" பிரியர்களுக்கு ஒரு நல்ல சேதி

ஆமாண்ணே!!!

சென்னையில அடிக்கடி "Go Cart" ஓட்டி பழக்கமாயிடுச்சி. விடுமுறைக்காக இப்போ 5 நாள் மதுரையில இருக்கும் போது, என்னோட நண்பர் மதுரையிலயும் "கோ கார்ட்" இருப்பதாக சொன்னார். என்னடா இது? புதுசா இருக்கேன்னு கிளம்பி போனேன். சும்மா சொல்லக்கூடாது. நல்லாத்தான்யா இருக்கு. ட்ராக் நல்லா வளைஞ்சி வளைஞ்சி போறதுனால நல்லாவே இருக்கு. எங்க இருக்குன்னு கேக்குறீகளா. ரிங் ரோட்ல இருந்து சிவகங்கை சாலையில திரும்புனவுடனே வலது கை பக்கமா இருக்குங்க. அஞ்சு நிமிடத்துக்கு ரூ.75/- வசூலிக்கிறாங்க. ஊருக்கு வந்தீயன்னா முயற்சி பண்ணி பாருங்க.


அப்படியே, மதுர காரவுக யாராவது இத படிச்சீகன்னா, மதுரையில "Bowling alley" எங்கயாவது இருந்ததுன்னா தெரியப்படுத்துங்க.

Friday, October 03, 2008

நோகியா 5800 - ஐ - ஃபோன் கில்லர்

ஆப்பிள் நிறுவனம் ஐஃபோனை வெளியிட்டதுல இருந்து, ஆளாளுக்கு போட்டி போட்டுகிட்டு "ஐஃபோன் கில்லர்"னு புதுசு புதுசா கிளப்பிவிட்றானுக. போன வாரம் தான் கூகிள் நிறுவனமும், டி-மொபைலும் சேர்ந்து ஒரு ஃபோன வெளியிட்டாங்க. இப்போ புதுசா நோகியாவும் கிளம்பிடுச்சு. அனேகமா, நோகியாவோட முதல் டச் ஸ்கிரீன் மொபைலுன்னு நினைக்கிறேன். இதோ, கீழே இந்த புதூ மொபைலோட படங்கள பாருங்க. இந்த வருட கடைசில இந்த மொபைல் இந்தியாவுக்கு வந்திடும்னு எதிர்பார்க்கலாம்.

இதோட மற்ற விபரங்கள்:
  • 3.2" தொடு-திரை.
  • இதன் எடை சற்று கம்மியே, 109 கிராம்.
  • மூன்று நிறங்களில் வருகிறது, கருப்பு, சிகப்பு, நீலம்.
  • 8gb microSD கார்டுடன் வருகிறது. (max: 16gb)
  • 3.2 மெகா பிக்ஸல் காமிரா. (30 fps வரை படங்களை பதிவு செய்யலாம்)
  • Wi-Fi, Bluetooth, GPS.
  • Standard 3.5 mm ஹெட்-ஃபோன் ஜாக்.
  • 3G சப்போர்ட்.
  • விலை $340.
ஆனால், இதில் ஒரு பெரிய குறையாக காணப்படுவது, வெளி அப்ளிகேஷன்களை நிறுவ முடியாதாம்.


காதலில் விழுந்தேன் - "உனக்கென நான்" ஒரு டப்பிங் பாடல்

"காதலில் விழுந்தேன்" பாடல்கள் நன்றாகவே ஹிட் ஆகிவிட்டது. இதில் இடம் பெற்றுள்ள "உனக்கென நான்" பாடல் அப்படியே "ரிஹானா"வின் "Unfaithful" பாடலில் இருந்து காப்பி அடிக்கப் பட்டுள்ளது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், டப்பிங் செய்யப் பட்டுள்ளது. நீங்களே கேட்டுப் பாருங்கள்.